செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

5 பேருடன் இருந்த கள்ள தொடர்பு, அடங்காத மோகம்.. 6வது காதலனுடன் செட்டிலாகும் பேய் பட நடிகை

சினிமா துறையில் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டு பல வருடங்கள் பிரியாமல் வாழ்ந்து வரும் எத்தனையோ நட்சத்திர ஜோடிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சீசனுக்கு ஏற்றார் போல் காதலர்களை கழட்டி விடும் சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் முக்கியமானவராக இருப்பவர் தான் இந்த நடிகை.

பாலிவுட் திரையுலகில் சர்ச்சை நாயகியாக இருக்கும் இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கும் இந்த நடிகையை பற்றிய பேச்சு தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

Also read: எனக்கு டான்ஸ் தான் முதல, நடிப்புல அப்புறம் தான்.. இயக்குனர்களை கடுப்பேற்றிய சந்திரமுகி நடிகர்

எப்போதுமே ஒரு சர்ச்சை வளையத்தில் இருக்கும் இவர் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் 16 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்தார். பிறகு வெளியில் தங்கி வாய்ப்புகளை தேடி வந்த அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு வெகு விரைவிலேயே முன்னணி அந்தஸ்தும் கிடைத்தது.

அது மட்டுமல்லாமல் இவர் கிட்டத்தட்ட ஐந்து பேருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். அதில் இவருக்கு சினிமா வாய்ப்புகளை கொடுத்த அப்பா வயது தயாரிப்பாளர் ஒருவருடன் கங்கனா மூன்று ஆண்டுகள் வரை தொடர்பில் இருந்தார். ஆனால் அந்த தயாரிப்பாளர் ஒரு மது விருந்தில் தன்னை பலவந்தப்படுத்தியதாக இவர் புகார் கொடுத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Also read: ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்கு ஆப்பு.. நடிகையின் திமிர் பேச்சால் வந்த விளைவு

அதைத்தொடர்ந்து ஒரு இளம் நடிகருடன் இவர் நெருக்கமாக பழகினார். ஆனால் அதுவும் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. அதன் பிறகு பாலிவுட் நடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கனுடன் இவருக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டது. அவருடன் லிவிங் டு கெதரில் சில வருடங்கள் வாழ்ந்த கங்கனா பின் அவரையும் பிரிந்தார். இவரைத் தொடர்ந்து நான்காவதாக ஒரு வெளிநாட்டு மருத்துவர் உடன் இவர் நெருக்கமாக பழகினார். ஆனால் அதுவும் குறிப்பிட்ட சில காலம் வரை தான்.

அதன் பிறகு நடிகர் ரித்திக் ரோஷன் உடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது இதன் காரணமாகவே ரித்திக் ரோஷன் தன் மனைவியை விவாகரத்தும் செய்தார். ஆனால் கங்கனா இவரையும் கழட்டி விட்டு விட்டார். இப்படி ஐந்து பேருடன் நெருங்கிய உறவில் இருந்த இந்த சர்ச்சை நாயகி இப்போது ஆறாவதாக ஒருவரை காதலித்து வருகிறாராம். அவர் யார் என்ற தகவல் இன்னும் வெளிவராத நிலையில் எப்போது வேண்டுமானாலும் இவர்களுடைய திருமண அறிவிப்பு வரும் என்று கூறுகின்றனர். இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: டாப் நடிகர்கள் இன்றுவரை செய்யாத உதவி.. துணிச்சலாக செஞ்சு காட்டிய லாரன்ஸ்

Trending News