Gossip: சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் அந்த நடிகைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த காலகட்டத்திலேயே டாப் ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடியாக நடிக்க தொடங்கினார்.
கோலிவுட் மட்டுமல்லாமல் அக்கட தேசத்து ஹீரோக்களும் இவருடைய கால்சீட்டுக்காக தவம் இருந்த காலமும் உண்டு. இப்படி பிசியாக இருந்த நடிகை அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார்.
அதில் ஒல்லி நடிகருடன் இவரை சேர்த்து வைத்து பல கிசுகிசுக்கள் வெளிவந்தது. இன்னும் சொல்லப்போனால் இவர் அந்த நடிகரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு வந்தார். ஆனால் நடிகரின் சுயரூபம் தெரிந்ததால் அவரை விட்டு விலகினர்.
கையும் களவுமாக பிடித்த தாய்குலம்
பின் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்ட அவர் நடிப்பை விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் சில படங்களில் தலைகாட்டி வரும் அவருக்கு ஒரு பெரும் புள்ளியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாம்.
இதையெல்லாம் பார்த்த தாய்குலம் மகளை கண்டித்து இருக்கிறார். ஆனாலும் நடிகை பெரும்புள்ளியுடன் ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறார். அந்த அளவுக்கு அவர்களின் நெருக்கம் இருந்திருக்கிறது.
இதை தெரிந்து கொண்டா அம்மாவும் நேரடியாக அந்த ஹோட்டலுக்கு சென்று மகளை கையும் களவுமாக பிடித்திருக்கிறார். ஆனால் அந்த பெரும்புள்ளி தாய்குலத்தையே மிரட்டி வைத்த கதை தான் இப்போது கோடம்பாக்கத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.
நடிகைகளின் சமீபத்திய கிசுகிசு செய்திகள்
- கண்ட்ரோல் பண்ணா விவாகரத்து தான்
- தகர்ந்து போன ஹீரோயின் கனவு
- சீனியர் நடிகையின் பின்னால் சுற்றும் இளம் ஹீரோக்கள்