வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

திருமண ஆடையில் இருக்கும் ஸ்பெஷல்.. விவாகரத்துக்கு பிறகும் பத்திரப்படுத்தும் நடிகை

ஆசையாக காதலித்த அந்த நடிகரை திருமணம் செய்து கொண்டு பெரிய வீட்டு மருமகள் ஆனார் சமத்து நடிகை. ஆனால் இருவருக்கும் அப்படி என்ன மனக்கசப்போ தெரியவில்லை சில வருடங்களிலேயே பிரிந்து விட்டனர்.

தற்போது இருவரும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். அதில் நடிகர் வரலாற்று பட நடிகையுடன் டேட்டிங் செய்வதெல்லாம் தனி கதை.

அதேபோல் நடிகை பல சங்கடங்களில் இருந்து மீண்டு வந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவர் நடத்தும் போட்டோ சூட் எல்லாம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை தன்னுடைய திருமண ஆடையை பத்திரமாக பாதுகாத்து வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. பொதுவாக விவாகரத்துக்கு பிறகு நடிகைகள் திருமண சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒதுக்கி விடுவார்கள்.

ஆனால் இவரோ அந்த உடையை கொஞ்சம் மாறுதல் செய்து ஒரு விருது விழாவிற்கு அணிந்து வந்திருக்கிறார். இது பற்றி கேட்டால் இந்த டிரஸ் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல்.

எனக்கு பிடித்த இந்த உடையை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். அப்படி என்ன சென்டிமென்ட் என்று தெரியவில்லை.

ஆனால் இன்னும் பழைய காதலை மறக்கவில்லையா என்ற பேச்சு ஒரு பக்கம் கிளம்பியுள்ளது. இதற்கு நடிகையே வாய் திறந்து பதில் சொன்னால் தான் உண்டு.

Trending News