புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அருக்காணி to அல்ட்ரா மாடர்ன் ராணி.. தகதகவென டாலடிக்கும் மாமியின் சீக்ரெட்

Gossip: 40 வயதை கடந்திருந்தாலும் மாமி நடிகை இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலிக்கிறார். இதுவே போட்டி நடிகைகளுக்கு அவர் மீது பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவும் தற்போது அவர் கையில் சில படங்கள் இருக்கிறது. அதனாலேயே அவர் தன்னுடைய அழகை இன்னும் மெருகேற்ற ஏகப்பட்ட செலவுகளை செய்து வருகிறாராம். ஆரம்பத்தில் நடிகை ஒன்றும் இந்த அளவுக்கு கலர் கிடையாது.

அருக்காணி ரேஞ்சுக்கு டல்லாக தான் இருந்தார். ஆனால் வாய்ப்புகள் குவிய தொடங்கியதும் நடிகை வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல் மாறிவிட்டார். அதிலும் அவருடைய ரீ என்ட்ரி படத்தில் கொள்ளை அழகோடு மிளிர்ந்தார்.

மாமியின் நடிகையின் அழகின் சீக்ரெட்

இதனால் கிறங்கிப் போன ரசிகர்கள் அவருக்கு அமோக வரவேற்பை கொடுத்தனர். மேலும் அவருடைய அழகின் ரகசியம் என்ன என்று யார் கேட்டாலும் நடிகை சொல்வது உணவு கட்டுப்பாடு பற்றி தான்.

இப்படி தான் சாப்பிடுவேன் இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கதை கதையாக நடிகை அளந்து விடுவார். உண்மையில் இதற்காக நடிகை ஏகப்பட்ட செலவு செய்திருக்கிறாராம். எப்படிப்பட்ட டல் நிறமாக இருந்தாலும் சிகிச்சை மூலம் கலராகி விட முடியும்.

அதுதான் இப்போதைய டெக்னாலஜியின் முன்னேற்றம். நடிகையும் அப்படித்தான் சில சிகிச்சைகளையும் மேற்கொண்டு தற்போது இளம் நடிகைகளுக்கு போட்டியாக மாறி இருக்கிறாராம். ஆனால் இந்த விவகாரம் கடுகு அளவு கூட தெரியக்கூடாது என அவர் மெயின்டைன் செய்து வருகிறார்.

Trending News