வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டாப் ஹீரோக்களை குறி வைக்கும் உயர்ந்த நடிகை.. வச்சா குடுமி அடிச்சா மொட்டை

Gossip: அந்த உயர்ந்த நடிகைக்கு இப்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. ஆரம்பத்தில் அவர் கோலிவுட்டில் தான் அறிமுகமானார். ஆனால் அந்த படம் மொக்கை வாங்கியதில் நடிகை மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பக்கத்து மாநிலத்திற்கு சென்றார்.

அங்கும் சில போராட்டங்களை சந்தித்த அவர் சில ஹிட் படங்களை கொடுத்து முன்னணி அந்தஸ்தை பிடித்தார். ஆனால் அவருக்கு போட்டியாக நான்கு எழுத்து நடிகை கிரஷ் நடிகை ஆகியோர் வந்தனர்.

இதனால் நடிகையின் கவனம் பாலிவுட் பக்கம் சென்றது. அங்கு ஓரளவுக்கு படங்களில் நடித்து வந்த நடிகை மீண்டும் தமிழ் பக்கம் வந்தார். மாஸ் ஹீரோவுடன் அவர் இணைந்து நடித்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிச்சா இந்த ஹீரோவோட தான் நடிப்பேன்

ஆனால் நடிகருடன் அம்மணி போட்ட ஆட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை அடுத்து மற்ற மொழிகளில் கவனம் செலுத்திய நடிகை மீண்டும் தமிழ் பக்கம் வந்துள்ளார்.

தற்போது கைவசம் டாப் ஹீரோக்களின் இரண்டு படங்களை வைத்திருக்கும் அவர் அடுத்த வாய்ப்பு வேட்டையிலும் இறங்கி இருக்கிறாராம். ஆனால் முன்னணி ஹீரோ படத்துல நடிக்க தயார் இல்லை என்றால் நோ என கரார் காட்டி வருகிறாராம்.

அப்படியும் சில நல்ல கேரக்டர்கள் வந்திருக்கிறது, ஆனால் நடிகை எதற்கும் மசியவில்லை. பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு இல்லைன்னா பாலிவுட் பக்கமே செல்ல தயார் என நெருங்கிய வட்டாரங்களில் நடிகை அதிரடியாக கூறி வருகிறாராம்.

Trending News