செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தோல்வி பயத்தை காட்டிடாத நெல்சா.. ஜெயிலர் படத்தில் இறங்கிய அடுத்த பாலிவுட் நடிகர்

அண்ணாத்தே திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இணைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் படத்தில் ரம்யா கிருஷ்ணன் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

175 கோடி பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படமாக தொடங்கப்பட்ட ஜெயிலர் தற்போது யாரும் எதிர்பார்க்காத பிரம்மாண்டத்தை உருவாக்கி வருகிறது. நாளுக்கு நாள் இந்த படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி கொண்டிருக்கிறது என்று தான் சொல்லலாம். அந்த வகையில் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

Also Read: 18 வருடத்திற்கு பின் திரையில் மோதிக் கொள்ளும் ரஜினி, கமல்.. பொன்னியின் செல்வனால் ஏற்பட்ட மோதல்

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த மாதம் அப்டேட் வந்தது. இந்நிலையில் பாலிவுட் சினிமா உலகின் முக்கிய நடிகர் ஒருவர் தற்போது இணைந்திருக்கிறார். மொத்தத்தில் நெல்சன் ஜெயிலர் படத்தின் கதையையே ரஜினிக்காக மாற்றியிருப்பதாக தெரிகிறது.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தான் இந்த படத்தில் இணைந்திருப்பது. இந்த தகவலை நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்திருக்கிறது. கைக்குட்டையால் ஜாக்கி ஷெராஃப் முகம் பாதி மூடப்பட்ட புகைப்படம் ஒன்றையும் சேர்த்து படக்குழு பகிர்ந்திருக்கிறது. நடிகர் ஷெராஃப்பும் சன் பிக்சர்ஸின் அந்த பதிவை ரீடுவீட் செய்திருக்கிறார்.

Also Read: சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை விட்டுக் கொடுக்காத ரஜினி.. பான் இந்திய படம் என்பதற்காக மட்டுமே செய்த சித்து வேலை

முதல் கட்டமாக இந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் உலகின் கிங் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க தான் பேச்சு வார்த்தை நடைபெற்று இருக்கிறது. அது கைகூடாமல் போகவே நடிகர் ஜாக்கி ஷெராஃப்பை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவுறும் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஏற்கனவே ஆரண்ய காண்டம் மற்றும் தளபதி விஜய்யின் பிகில் போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் ‘புஷ்பா’ பட நடிகர் சுனில், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

Also Read: வாழ வைத்த தெய்வங்களை வாட்டி வதைக்க முடிவு எடுத்து இருக்கிறாரா ரஜினி.. இளையராஜா போல் மாறிய சூப்பர் ஸ்டார்

 

Trending News