தனுஷால் அடையாளம் காணப்பட்ட பிரபலம்.. எக்ஸ் புருஷனை பெருமையாக பேசிய ஐஸ்வர்யா

Actor Dhanush : என்னதான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தனியாக வாழ்ந்து வந்தாலும் ஒருவரை பற்றி ஒருவர் குறை சொல்லாமல் பிரிந்து இருக்கின்றனர். மேலும் தங்களுடைய குழந்தைகளின் விழாவில் தவறாமல் இருவரும் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் சமீபத்தில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய நிலையில் பல்வேறு ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அதில் தனது எக்ஸ் கணவர் தனுஷை பற்றி பெருமையாக பேசி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கிறது.

அதாவது இசையமைப்பாளர் அனிருத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் தான் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் ரஜினியின் உறவினர் என்பதால் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யவில்லையாம். அதாவது தனுஷ் அனிருத்திடம் திறமை இருப்பதை கண்டறிந்து உள்ளார்.

Also Read : கௌதம் மேனன் கேரியரில் விழுந்த 2 பெரிய அடிகள்.. அவர் பெயரை தட்டிட்டு போன தனுஷ் பெஸ்டி

அதோடு அனிருத்தின் பெற்றோர் அவரை படிப்பதற்காக வெளிநாடு அனுப்ப முடிவு செய்து இருந்தார்களாம். ஆனால் தனுஷ் எல்லோரிடமும் பேசி அவர்களை சமாதானப்படுத்தினாராம். அதோடு அனிருத்துக்கு கீபோர்டு வாங்கி கொடுத்துள்ளதாக ஐஸ்வர்யா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அதன் பிறகு 3 படத்தில் அனிருத்தை இசையமைக்க சொன்னார். மேலும் இன்று அனிருத் மிகப்பெரிய வளர்ச்சி அடைவதற்கு காரணம் அவருடைய முழு உழைப்பு தான். இப்போது டாப் நடிகர்களின் படங்கள் எல்லாமே அனிருத் கைவசம் இருக்கிறது. ஆனால் அவருக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கியது தனுஷ் தான்.

Also Read : பரட்டைத் தலை, தாடி, கந்தலுடை என ஆண்டி போல் இருக்கும் தனுஷ்.. குபேரா படத்தின் கதை இதுதான்