வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

படிப்பறிவு இல்ல, வாய மூடிட்டு வீட்ல இரு.. ஜோதிகாவை படுமோசமாக திட்டிய பிரபலம்

Jyothika: கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியின் கங்குவா வெளியானது. இப்படம் நிச்சயம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் என்ற ஆவல் அனைவருக்கும் இருந்தது.

ஆனால் தற்போது படத்தை ஆடியன்ஸ் கழுவி ஊற்றி வருகின்றனர். இதெல்லாம் ஒரு கதையா காதுல ரத்தம் வருது இரைச்சலா இருக்கு போன்ற நெகட்டிவ் விமர்சனங்கள் தீயாக பரவியது. அதையடுத்து சோசியல் மீடியாவில் இப்படம் ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியது.

இடையில் தனுஷ், நயன்தாரா விவகாரம் வந்ததில் ரசிகர்கள் இதை மறந்து அந்த சர்ச்சைக்கு தாவினார்கள். ஆனால் ஜோதிகா கணவருக்கு சப்போர்ட் செய்கிறேன் என்ற பெயரில் ஒரு அறிக்கையை விட்டு மீண்டும் கங்குவா பக்கம் ரசிகர்களை திசை திருப்பி விட்டார்.

ஜோதிகாவை கிழித்து தொங்கவிட்ட சுசித்ரா

அதையடுத்து ஜோதிகாவையும் சேர்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில் சர்ச்சை பாடகியான சுசித்ரா தன் பங்குக்கு ஜோதிகாவை இந்த வார்த்தை தான் என்று இல்லாமல் படுமோசமாக திட்டி உள்ளார்.

அதிலும் அந்த அறிக்கையில் ஜோதிகாவின் இங்கிலீஷை அவர் பங்கமாக கலாய்த்து உள்ளார். படிப்பறிவு இல்லையா இங்கிலீஷ் தெரிஞ்சா எழுதனும். இல்லனா வாய மூடிட்டு வீட்ல இருக்கணும். வேற யாரையாவது எழுத சொல்ல வேண்டியதான என கலாய்த்து தள்ளியுள்ளார்.

மேலும் கங்குவா படத்தில் 30 நிமிடங்கள் சரியில்லை என ஜோதிகா கூறியிருந்தார். அதை குறிப்பிட்ட சுசித்ரா அப்ப நாங்க அரை மணி நேரம் கழிச்சு படம் பாக்க வரணுமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நீ என்ன இந்திய சினிமாவின் தர்ம தேவதையா எனவும் சாடியுள்ளார்.

அது மட்டும் இன்றி சூர்யா ஜோதிகா என சப்போர்ட் செய்து வரும் ரசிகர்களையும் திட்டி தீர்த்து உள்ளார். அவங்க என்ன மாற்றான் பிரதர்ஸா என தன் வெறுப்பை அப்பட்டமாக காட்டியுள்ளார். இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா உங்ககிட்ட யாரு கருத்து கேட்டது என சுசித்ராவை திட்டி வருகின்றனர்.

Trending News