திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனை புறக்கணித்த பிரபல சேனல்.. சரியான நேரத்தில் கொடுத்த பதிலடி

மிகக் குறுகிய காலத்தில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அசுர வளர்ச்சி அடைந்து தற்போது டாப் ஹீரோ லிஸ்டில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இவர் தான் நடிக்கும் படங்களில் ஸ்டாண்ட் அப் காமெடி, நடனம், நடிப்பு அத்துணையும் பிச்சு உதறுவதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இவரது சமீபத்திய படங்களான டான், டாக்டர் போன்றவை 100 கோடி வசூலை பாக்ஸ் ஆபீஸில் குறித்து அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு எடுத்து சென்றிருக்கிறது.

Also Read: முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய சிவகார்த்திகேயன்.. இணையத்தில் வைரலாகும் கியூட் புகைப்படம்

ஆனால் இவர் விஜய் டிவியில் இருந்து வந்த ஒரே காரணத்தினால் அவருடைய முதல் படமான மெரினா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு முன்னணி தொலைக்காட்சிகள் மறுத்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கினார்.

அப்போது சிவகார்த்திகேயனை ஒதுக்கிய சேனல்கள் அனைத்தும் இப்போது அவருடைய பேட்டிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வேற லெவல் சம்பவம் செய்து வருகிறார்.

Also Read: கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. பயங்கரமாக ஸ்கெட்ச் போட்ட பிரபலங்கள்

அதிதி ஷங்கருடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான மாவீரன் படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் ஈடுபட்டு நல்ல லாபம் பார்க்கிறார்.

தொடர்ந்து 10 வருடங்களாக தனக்கான தனி அடையாளத்தை பெறுவதற்காக சிவகார்த்திகேயன் படாத கஷ்டம் பட்டிருக்கிறார். அதிலும் தன்னைப் புறக்கணித்து அவமானப் படுத்தியவர்களுக்கு தன்னுடைய வெற்றிகளின் மூலம் பதிலடி கொடுத்து கெத்து காட்டுகிறார்.

Also Read: வில்லங்கமாக நடித்து பெயர் வாங்கிய 5 அப்பா கேரக்டர்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சிவகார்த்திகேயன்

Trending News