சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குழந்தை ஆசையால் அழிந்து போன காதல்.. விவாகரத்துக்கு தயாராகும் ஜோடி

பிரபல சேனல் ஒன்றின் முக்கிய ஜோடி தற்போது விவாகரத்துக்கு தயாராகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசித்துள்ளது. ஏற்கனவே டிவி பிரபலம் கணவரை பிரிந்து தனியாகத்தான் பொழுதைப் போக்கி வந்தார்.

ஆனால் எப்படியும் இவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று நம்பப்பட்டது. தற்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகி விட்டதாம். இதற்கு முக்கிய காரணமே குழந்தை இல்லாதது தான்.

இருந்தாலும் அந்த டிவி பிரபலம் இதையெல்லாம் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். ஆனால் புகுந்த வீட்டிலும் உறவினர்கள் தரப்பில் இருந்தும் அவருக்கு தீராத மன உளைச்சல் வந்திருக்கிறது. எங்கு போனாலும் குழந்தை இல்லையா? என்ற கேள்வி தான் முன்னால் வந்து நிற்கிறதாம்.

Also read: பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

ஒரு கட்டத்தில் கணவர் வீட்டில் இருந்து வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் காதலுக்காக பொறுத்துப்போன டிவி பிரபலம் கணவரின் அமைதியை பார்த்து ஆக்ரோஷமாகி இருக்கிறார். அதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனையும் செய்து பார்த்து இருக்கிறார்.

அதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. இனிமேலும் எதற்காக பழியை சுமக்க வேண்டும் என்று அவர் தற்போது விவாகரத்துக்கு தயாராகி விட்டதாக பேசப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் குழந்தை ஆசை இந்த ஜோடியின் காதலுக்கு முடிவு கட்டி இருக்கிறது.

Also read: பல பெண்களுடன் தொடர்பு, சொத்துக்காக நடந்த கல்யாணம்.. டிவி நடிகர் செய்த பித்தலாட்டம்

Trending News