புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இளையராஜாவுக்கு கொடிபிடித்த பத்திரிக்கையாளர்.. தைரியம் இருந்தா இப்ப பேசு, கொந்தளிக்கும் இயக்குனர்

Ilayaraja: அது என்னவோ தெரியவில்லை இளையராஜா பற்றிய செய்திகள் எல்லாமே ஏதாவது ஒரு பிரச்சனைக்கு வழி வகுத்து விடுகிறது. அப்படித்தான் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இசைஞானிக்கு வக்காலத்து செய்து இயக்குனர் ஒருவரிடம் வாங்கி கட்டியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் சேனல்களை ஆரம்பித்து சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை கூறி வருகின்றனர். அதில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பல விஷயங்கள் குறித்து தன்னுடைய சேனலில் பேசி வருகிறார். அப்படித்தான் கடந்த வாரம் இளையராஜா பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதில் 96 மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் போன்ற படங்களில் அவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி கூறியிருந்தார். மேலும் 96 பட வெளியீட்டின் போது இளையராஜா தகாத வார்த்தை ஒன்றை உதித்தது பற்றியும் பேசி இருந்தார். அதே சமயம் படக்குழுவினர் பாடல்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வாங்காதது போன்றும் பேசி இருந்தார்.

Also read: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தால் இளையராஜாவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

அதற்கு தற்போது 96 பட இயக்குனர் பிரேம்குமார் பதில் அளித்துள்ளார். அதில் அவர் இளையராஜாவை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக மற்றவர்களை சிறுமைப்படுத்தி பேசாதீர்கள் என கொந்தளித்துள்ளார். மேலும் அப்பாடல்களை பயன்படுத்துவதற்கு பணம் கொடுத்து முறையான அனுமதி பெற்று விட்டோம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டிருந்தார் என சொல்வது முற்றிலும் தவறு. சினிமா என்பது திரைத்துறையினருக்கு மட்டுமல்ல அதைப் பற்றிய செய்தியை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கும் சொந்தமானது.

அதை பாதுகாப்பது இருவரின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் செய்யாறு பாலு உண்மை என்ன என தெரியாமல் கண்டபடி பேசியது தெளிவாகி இருக்கிறது. இதே போன்று தான் பயில்வானும் ஒரு விஷயத்தைப் பற்றி முழுதாக தெரியாமல் இட்டுக்கட்டி பேசி பிரச்சனையை உருவாக்கி விடுவார்.

Also read: இளையராஜாவின் கடைக்குட்டி மகனின் சொத்து மதிப்பு.. 16 வயதிலிருந்து சம்பாதித்து சேர்த்து வைத்த யுவன்

Trending News