வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மீனாவுக்கு சுட்டு போட்டாலும் இது வராது.. ரகசியத்தை உடைத்த பிரபல இயக்குனர்

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் வளர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் உள்ள அத்தனை டாப் நட்சத்திரங்களுடனும் இவர் இணைந்து நடித்து விட்டார். ஹீரோக்களுக்கு இணையாக படு பிஸியாக இருந்த நடிகை இவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் அவருடனே கதாநாயகியாக ஜோடி போட்டவர். கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், முரளி, அஜித் என அத்தனை முன்னணி நட்சத்திரங்களுக்கும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் மீனா. மீனாவை பற்றி சமீபத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் பேசி இருக்கிறார்.

Also Read:மீனா நடிப்பில் மறக்க முடியாத 6 படங்கள்.. காலத்தால் அழியாத சோலையம்மா

தன்னுடைய எதார்த்தமான படங்களினால் ரசிகர்களின் மனதை கவர்ந்த கே எஸ் ரவிக்குமார் தான் அந்த இயக்குனர். நடிகை மீனா முதன் முதலில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை திரைப்படத்தில் தான் நடித்தார். அந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் வேறொரு ஹீரோயினை பார்த்து அதன் பின்னர் தான் மீனா முடிவானார். ஆனால் நாட்டாமைக்கு பிறகு மீனா ரவிக்குமாரின் அதிர்ஷ்டநாயகியாகவே மாறினார்.

மீனா தொடர்ந்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, அவ்வை சண்முகி, வில்லன் போன்ற படங்களில் நடித்தார். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், விஜயகுமார், சிம்ரன் நடித்த திரைப்படம் தான் நட்புக்காக . இந்த படத்தின் தெலுங்கு வர்ஷனை ரவிக்குமார் தான் இயக்கினார். அதில் சிம்ரன் கேரக்டரில் மீனா நடித்திருந்தார்.

Also Read:தேடிப் போய் வாய்ப்பு கேட்ட மீனா.. செட்டாகாது என ரிஜெக்ட் செய்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் நடிகை மீனாவை நீலாம்பரி கேரக்டரில் நடிக்க வைக்க ரஜினி ஆசைப்பட்டார். அதன் பின்னர் தான் ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டரில் நடித்தார். இதைப்பற்றி பேசிய ரவிக்குமார் மீனாவுக்கு எப்படி நடித்தாலும் அந்த வில்லத்தனமான கேரக்டர் செட்டாகாது என்று சொல்லி இருக்கிறார்.

மீனாவின் கண்கள் மற்றும் நடிப்பு குழந்தைத்தனமாக இருக்கும். அதனால் படையப்பா படம் மட்டுமல்ல வேறு எந்த படத்திலும் அவருக்கு நெகட்டிவ் ரோல் செட்டாகாது. அப்படியே அவர் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் ரசிகர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீனா படையப்பாவின் நீலாம்பரியாக நடிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:6 மாதங்களாக காத்திருந்தேன்.. கணவர் இறந்த பிறகு மீனா எடுத்த அதிரடி முடிவு

Trending News