திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

எனக்கு ரஷ்மிகா தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் 57 வயது இயக்குனர்

இந்த ரஷ்மிகா பொண்ணுகிட்ட அப்படி என்னதான் வசியம் இருக்கிறதோ தெரியவில்லை. இளம் நடிகர்கள் முதல் மூத்த இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வைத்துள்ளார்.

கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவின் டாப் நடிகையாக உயர்ந்து விட்டார். தெலுங்கில் அவர் நடித்த கீதா கோவிந்தம் போன்ற சில படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

அதுமட்டுமில்லாமல் தமிழில் அவர் சுல்தான் படத்தில் நடிப்பதற்கு முன்பே பெரிய அளவு ரசிகர் பட்டாளம் உருவானது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா போன்ற நடிகைகள் சினிமாவில் 37 வயதில் சாதித்ததை ராஷ்மிகா வெறும் 25 வயதில் சாதித்து விட்டார்.

தற்போது இந்தியில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா தன்னுடைய படத்தில் நடித்தே ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று அடம் பிடித்துக்கொண்டிருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர்.

57 வயதான சங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படம் இயக்க உள்ளார். இந்த படத்தில் ராம் சரணுக்கு இரட்டை வேடமாம். அதில் ஒருவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்னொரு ராம் சரணுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனாவை எப்படியாவது படத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். தற்போது ஹிந்தியிலும் அவர் பிரபலமான நடிகையாகி விட்டதால் பட வியாபாரத்திற்கும் பெரிதும் உதவும் என தயாரிப்பாளர்களும் ஓகே சொல்லி விட்டார்களாம்.

shankar-ramcharan-cinemapettai
shankar-ramcharan-cinemapettai

Trending News