
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு, விஜய்யை வைத்து படம் இயக்குவதற்கு ஆசை என்று ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தமிழில் பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மாநாடு திரைப்படம் வெங்கட்பிரபுவுக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையை கொடுத்தது. அதைத் தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கில் நடிகர் நாகசைதன்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு விஜய்யை பார்க்கும் போது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை பார்ப்பது போன்று இருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் விஜய்யின் நடிப்பு ஹ்யூமர் கலந்து இருந்தது. அதை பார்க்கும்போது எனக்கு வில் ஸ்மித் படங்களைப் போன்று விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் இப்போது விஜய் வேற லெவலில் இருக்கிறார்.
கூடிய விரைவில் அதற்கு ஏற்றவாறு ஒரு கதையை தயார் செய்து விஜய்யிடம் சொல்ல வேண்டும் என்று தன்னுடைய பல வருட ஆசையை தெரிவித்துள்ளார். இதை பார்த்த சில ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறினாலும், ஒரு சிலர் இப்படி ஓபனாக வாய்ப்பு கேட்கிறீர்களே என்று அவரை கலாய்க்கவும் செய்கின்றனர்.
மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அப்படி ஒரு மாஸான கதையை அவர் விஜய்க்காக தயார் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.