புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதி விஜய்யை இயக்க ஆசைப்படும் இயக்குனர்.. ஒரு ரசிகனாய் இதை நான் செய்ய வேண்டும்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் விஜய்யை இயக்க ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு நடிகராக, பாடலாசிரியராக, பாடகராக நம்மை கவர்ந்த அருண் ராஜா கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சைனா போன்ற நாடுகளிலும் இப்படத்திற்கு ஆதரவு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அருண்ராஜா, உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கினார்.

சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அருண் ராஜாவிடம் நீங்கள் ஒரு ரசிகராய் எந்த நடிகரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் நான் ஒரு ரசிகராய் தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவதற்கு ஆசைப்படுகிறேன் என்று கூறினார். மேலும் அப்படி நான் இயக்கும் பட்சத்தில் அந்தத் திரைப்படம் ஒரு காதல் மற்றும் ரொமான்ஸ் கலந்த மாஸ் திரைப்படமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அவருடைய இந்த ஆசை நிச்சயம் நிறைவேறும் என்று ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக ஆக்சனில் மிரட்டும் வரும் தளபதி விஜய் ரொமான்டிக் நாயகனாக ஒரு படம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News