திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆறாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபலம்.. தூக்கிவிட்டதே இவர்தான்!

தற்போது தமிழ் சினிமாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் யாருமே நினைத்துப்பார்க்க முடியாத உயரத்தை தொட்டு பலரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து டாக்டர், டான் போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ளன. அதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன.

அதற்கு காரணம் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் என்பவர் தான் தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதனாலேயே டாக்டர் படத்தை விஜய் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது டான் படத்தில் பொள்ளாச்சி படப்பிடிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிரபல இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் இயக்கும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் 6வது முறையாக பிரபல இசையமைப்பாளர் இமான் கைகோர்த்துள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலகட்டங்களில் வெளிவந்த படங்களான மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின.

கடைசியாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திலும் டி இமான் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைத்தன. அதேப்போல் அடுத்ததாக இவர்கள் இணையும் படத்தின் பாடல்கள் மீதும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

sivakarthikeyan-d-imman-cinemapettai
sivakarthikeyan-d-imman-cinemapettai

Trending News