திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அட்லியால் முடியாததை சாதித்த வெங்கட் பிரபு.. தளபதி 68-ல் இணையும் நடிப்பு அரக்கி

Thalapathy 68: லோகேஷ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை எதிர்பார்த்து ரசிகர்கள் இப்போது ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் லியோ பட ரிலீஸுக்காக காத்திருக்கும் தளபதி 68 டீம் வரும் அக்டோபர் மாதத்தில் படம் பற்றிய பல சர்ப்ரைஸ் அப்டேட்களை கொடுப்பதற்கு தயாராகி வருகிறார்கள். அதில் தற்போது ஹீரோயினுக்கான பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also read: ரிவால்வர் ரீட்டாவாக மாறிய நயன்தாரா.. மாஸாக மிரட்டும் விஜய் சேதுபதி, வெளிவந்த ஜவான் போஸ்டர்

அந்த வகையில் வெங்கட் பிரபு விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேசி வருகிறாராம். இதுதான் தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திருமலை படத்திற்கு பிறகு இந்த ஜோடி எந்த படத்திலும் இணையவில்லை.

அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படத்தில் கூட நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தார். ஆனால் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என்ற காரணத்தை கூறி அவர் படத்தில் இருந்து விலகினார். இதனால் இந்த கியூட் ஜோடியை மீண்டும் திரையில் காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Also read: லண்டன்னு சொல்லிட்டு நார்வே போன விஜய்.. மொத்த நெருப்பையும் கொளுத்தி போட்டு குளிர் காயும் நம்பர் நடிகை

ஆனால் தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் திரையில் இணைய இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் எப்படியும் ஜோதிகா சம்மதித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லியோ படத்தில் நடித்துள்ள திரிஷா பல வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்தார்.

அதற்கு அடுத்தபடியாக ஜோதிகாவும் தளபதி 68 ல் இணைய இருக்கிறார். இப்படி விஜய் தற்போதைய இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டி முன்னாள் ஹீரோயின்களுடன் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தளபதி 68 ல் ஜோதிகா இணைய இருக்கும் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: லியோ ஆடியோ லான்ச் இடத்தையும் நேரத்தையும் லாக் செய்த படக்குழு.. மாஸ்டர் மைண்டாக செயல்படும் நபர்

Trending News