திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதியுடன் இணைய இருந்த கீர்த்தி சுரேஷ்.. ராமராஜனால் நடந்த டிவிஸ்ட்

தமிழ், ஹிந்தி என்று மாறி மாறி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பில் விடுதலை திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. இதை அடுத்து அவர் மூன்று பாலிவுட் திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கரகாட்டக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்த கமிட்டாகி இருந்தார். 1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கவுண்டமணி, கனகா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் இப்போதும் கூட ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

Also read:ராமராஜன் ரீ என்ட்ரி படத்திற்கு வந்த ஆபத்து.. சாமானியன் என்ற டைட்டிலில் நடந்த துரோகம்!

அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக போகிறது என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ள செய்தது. அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஓகே செய்யப்பட்டு இருக்கிறது.

கதைப்படி ராமராஜனின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தார். விஜய் சேதுபதி பக்கத்து ஊரு டான்ஸர் ஆகவும் இவர்களுக்குள் நடக்கும் காதல் கதை தான் கரகாட்டக்காரன் 2 படத்தின் கதை. இதை கங்கை அமரன் ராமராஜனிடம் தெரிவித்திருக்கிறார்.

Also read:ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. எம்புட்டு பெரிய நெக்லஸ்

கதையை கேட்ட ராமராஜன் தன்னால் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்றும், ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்றும் பிடிவாதம் பிடித்திருக்கிறார். தற்போது சினிமா உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இன்னும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று கூறும் ராமராஜனை பார்த்து கங்கை அமரன் அரண்டு போயிருக்கிறார்.

அதனால் வேறு வழியில்லாமல் அந்த படம் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த தகவலை கங்கை அமரனே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படம் தற்போது பாதியிலேயே முடிந்து போனதில் பலருக்கும் வருத்தம் தான்.

Also read:ஜோசியம் பார்த்து கணித்த ராமராஜன்.. அன்றே தெரிந்து கொண்ட நளினி

Trending News