அஜித்துடன் ஹாட்ரிக் வெற்றிக்கு ஐடியா போட்ட பிரபலம்.. தல மனசு வச்சாதான் நடக்குமாம்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி போட பிரபலம் ஒருவர் கொடுக்கும் பேட்டிகளில் எல்லாம் அஜித்துக்கு ஐஸ் வைக்கும் வகையில் பேசி வருகிறாராம்.

அஜித் வினோத் இயக்கத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. முக்கால்வாசி தாண்டிய கிணற்றை முழுசாக தாண்ட முடியாமல் தவிக்கிறது படக்குழு.

கிளைமாக்ஸ் காட்சிகளை வெளிநாட்டில் தான் படமாக்க வேண்டும் என்ற சிக்கலில் மாட்டியதால் செட்டு போட்டுக் கூட எடுக்க முடியாது நிலைமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது படக்குழு.

இது ஒருபுறமிருக்க தல அஜித்தை வைத்து ஏற்கனவே இரண்டு படங்கள் தயாரித்த தயாரிப்பாளர் ஒரு மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்து ஒரு படம் தயாரிக்க ஆசைப்படுவதை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை. நம்ம போனிகபூர் தான். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை என்ற வெற்றி படத்தை கொடுத்த போனி கபூர் தற்போது வலிமை படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படமும் பிளாக்பஸ்டர் தான் என இப்போதே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து 3வது முறையாக அஜித்துடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற விரும்புவதாக சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தல அஜித்துக்கும் தனக்கும் நல்ல ஒரு பிணைப்பு இருப்பதாகவும், ஒருவேளை அஜித் என்னுடன் தொடர்ந்து படம் செய்ய விரும்பினால் இன்னும் ஐந்து படங்கள்கூட அஜீத்தை வைத்து தாராளமாக தயாரிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

boneykapoor-cinemapettai
boneykapoor-cinemapettai

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்