தமிழ் சினிமாவில் வில்லத்தனத்தில் மிரட்டிய நடிகர் ஒருவர் தனக்கு கதை கூற வந்த இயக்குனரை கதை சரியில்லை என சேரை தூக்கி அடித்த சம்பவத்தை பிரபலம் ஒருவர் சமீபத்தில் யூடியூப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
சினிமாவை பொறுத்தவரை வில்லன் நடிகர்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் வேடத்தில் நடிப்பவர்களை ஹீரோவிடம் அடி வாங்கும் கதாபாத்திரமாகவே அமைத்து வருகின்றனர்.
இது இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் போன்றோரின் படங்களில் கூட அப்படித்தான் இருந்து வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவையே தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி விட்டு இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் மார்க் ஆண்டனி.
மார்க் ஆண்டனி என தற்போதும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரகுவரன் தான். பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை விட ரகுவரனுக்கு வலுவான கதாபாத்திரம் இருந்தது. ஏன் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் கூட ரகுவரன் தான் ஹீரோ போல வலம் வருவார்.
அந்த அளவுக்கு அதிக வசனம் பேசாமல் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் மிரட்டி விட்டவர். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ரகுவரன் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவத்தை பிரபல யூடியூப் சேனலுக்கு பகிர்ந்துள்ளார்.
அதில் தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர் கூறிய கதை பிடிக்காததால் அவரை சேர் தூக்கி அடித்து விட்டாராம். மேலும் முன்னணி நடிகர்களுக்கு சொம்பு அடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என விடாப்பிடியாக இருந்து ஜெயித்துக் காட்டியவர் எனவும் ரகுவரனை புகழ்ந்துள்ளார்.