வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜயுடன் இணைந்து நடிக்கும் மாஸ் நடிகர்.. தளபதி 66 படத்தை பக்காவாக செதுக்கும் வம்சி!

நெல்சன் திலீப்குமார் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதியின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி கொண்டிருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ள நிலையில், இந்தப் படத்தில் மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், சாம், குஷ்பூ, ஸ்ரீகாந்த், யோகி பாபு என பல பிரபலங்கள் இணைகின்றனர். இவர்களுடன் தற்போது தெலுங்கு பிரபலம் ஒருவரும் இணைய உள்ளார்.

குடும்ப கதைக்களத்தை கொண்ட செண்டிமெண்ட் படமாகவே தளபதியின் 66-து படம் இருக்கும் என ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார். தெலுங்கு இயக்குனருடன் இணைந்திருக்கும் இளையதளபதி விஜய்யின் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக அவரை வம்சி அணுகி உள்ளார்.

இதனால் வம்சிக்கும் மகேஷ் பாபுவுக்கும் இருக்கும் நட்பின் அடிப்படையில், நண்பரின் கோரிக்கையை தவிர்க்கமுடியாமல் மகேஷ்பாபு தளபதி 66-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மகேஷ் பாபு-விஜய் காம்போ முதல் முதலாக இந்த படத்தில் இணைகிறது

ஏற்கனவே சென்டிமென்ட் படமாக உருவாக இருக்கும் தளபதி விஜயின் 66-வது படத்தில் தெலுங்கு இயக்குனர் இயக்குவது மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு நடிகரும் இணைந்திருப்பதால் இந்த படத்தில் தெலுங்கு வாடை அதிகம் வீசி விடுமோ என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுகிறது.

ஒரே படத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என 2 சூப்பர் ஸ்டார்ஸ் ஒரே படத்தில் நடித்திருப்பது சிலருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், எப்போதுமே தளபதி விஜய்யை மாஸ் ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு, மீண்டும் அப்படி பார்க்க நினைப்பதால் விஜய் இந்த படத்தில் தன்னுடைய அடையாளத்தை மாற்றிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்.

Trending News