விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் அடுத்த படம் ஒன்று விரைவில் உருவாக இருப்பதாகவும் அந்த படத்தை தெலுங்கு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
விஜய்யின் சினிமா கேரியரில் அட்லீயின் படங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் விஜய் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு வசூல் செய்து அவருடைய மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றன.
அதனைத் தொடர்ந்து 4-வது முறையாக இந்த கூட்டணியை இணைக்க பலரும் போராடி வருகின்றனர். இருந்தாலும் அட்லீ மீது கோலிவுட் வட்டாரங்களில் தேவையில்லாமல் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் என்ற ஒரு கெட்ட பெயர் இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே அட்லீயை சற்று ஒதுக்கி வைத்து விட்டு மற்ற இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் எனும் வெற்றி படத்தை கொடுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து நெல்சன் தற்போது தளபதி 65 படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில்தான் சமீப காலமாக தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் கட்டி வருகிறது. அந்த வகையில் அட்லீயையே இயக்குனராக வைத்து ஒரு படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.
மேலும் அந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து டபுள் ஹீரோ கதையை வைத்து படமாக்க முடிவு செய்துள்ளார்களாம். மேலும் இந்த ஐடியாவையே அட்லீ தான் கொடுத்ததாகவும், இந்த படத்தின் மூலம் தெலுங்கிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொள்ளலாம் என அட்லீ பிளான் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களும் தொடர்ந்து டபுள் ஹீரோ கதைகளில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது என்னமோ விஜய் சேதுபதிதான்.