வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

Avesham: சொப்பனத்தில் கூட நெனக்கல சாரே.. பகத் பாசிலின் ஆவேசம் ஓடிடி உரிமை இத்தனை கோடியா.!

Avesham Ott: இந்த வருட ஆரம்பத்தில் இருந்து மலையாள படங்கள் பாக்ஸ் ஆபிஸை கலக்கி கொண்டிருக்கிறது. மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலு, ஆடு ஜீவிதம் வரிசையில் பகத் பாசிலின் ஆவேசமும் நல்ல வசூலை பெற்றுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கி இருந்த இப்படம் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளியானது. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 150 கோடி வரை வசூலித்துள்ளது.

அதனாலேயே இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தன. அதில் வெற்றி பெற்றுள்ள அமேசான் பல கோடிகளை கொடுத்து இப்படத்தை வாங்கி இருக்கிறது.

ஆவேசம் டிஜிட்டல் ரைட்ஸ்

அதன்படி கிட்டதட்ட 35 கோடிக்கு ஆவேசம் படத்தின் ஓடிடி உரிமம் விற்பனையாகியுள்ளது. அப்படி பார்த்தால் போட்ட பட்ஜெட்டை விடவே அதிக அளவுக்கு இப்படம் பிசினஸ் ஆகி இருக்கிறது.

அந்த வகையில் இன்று இப்படம் அமேசானில் வெளியாகி இருக்கும் நிலையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி புஷ்பா 2 வெளியாகிறது.

ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் பகத் பாஸில் தன் நடிப்பால் அனைவரையும் மிரள விட்டார். அதேபோல் இந்த இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துவதோடு பகத் பாசிலின் மார்க்கெட்டையும் உயர்த்தி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending News