புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சின்னத்திரையில் பாப்புலராக இருக்கும் 10 பிரபலங்கள்.. பிரியங்காவை பின்னுக்கு தள்ளிய ராஜீவ்

சமீபகாலமாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பலரும் மக்களிடையே ரொம்பவே பிரபலமாகி வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து ரியாலிட்டி ஷோ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது பிரபலமான நாளிதழ் ஒன்று சின்னத்திரையில் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் பத்து நபர்கள் யார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சிலரைத் தவிர அனைவரும் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் – விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 5வது சீசனில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த 4 சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு மக்களிடையே வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. அவருக்கு இந்த வரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது.

கோபிநாத் – நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியின் மூலம் நம்மிடையே மிகவும் பிரபலமானவர் கோபிநாத். அவர் தொகுப்பாளர் மட்டுமல்லாது பெரிய திரையில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

சிவாங்கி – விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் சிவங்கி. அதைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய குறும்புத்தனமான பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

அகல்யா – ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பொதுமக்களிடம் நீங்க சொல்லுங்க டியூட் என்று இவர் கேட்கும் கேள்விகள் மிகவும் பிரபலமானவை. தன்னுடைய நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

ராஜு –  தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் ராஜு. அதில் தன்னுடைய நகைச்சுவையான பேச்சின் மூலம் பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கி வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

பிரியங்கா – இவரும் விஜய் டிவியின் பிரபலம் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். தன்னுடைய எதார்த்தமான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்ட இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார்.

பரீனா – ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் பரீனா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி வருகிறார். இவருக்கு சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சுனிதா – விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் சுனிதா. அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் இவர் பேசும் தமிழ் மக்களிடையே ரொம்பவே பிரபலம். அதிலும் தமிழ் பாடல்களை அவருடைய ஸ்டைலில் இவர் பாடுவது அனைவரையும் ரசிக்க வைக்கும். இதற்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

செப் தாமு – சமையல் கலை வல்லுனரான இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுள்ளார். அதில் இவர் புகழுடன் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. இந்த வரிசையில் இவர் 9வது இடத்தை பிடித்துள்ளார்.

கமல் – ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் தற்போது சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் பேசும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியலில் இவர் 10 வது இடத்தை பிடித்துள்ளார்.

Trending News