வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நாங்கல்லாம் அப்பவே அப்புடி.. நாசுக்காக காய் நகர்த்தி விஜய்க்கு ஸ்கெட்ச் போடும் முக்கிய புள்ளி

Actor Vijay: தன்னை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் விஜய் இப்போது மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுக்கிறார். ஆனாலும் அவரை வளைத்து போட நாசுக்காக காய் நகர்த்தும் வேலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் முக்கிய புள்ளி ஒருவர் அவருக்கு ஜால்ரா தட்டி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் வேறு யாரும் கிடையாது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தான். சாதாரணமாகவே இவர் எது பேசினாலும் அது பரபரப்பில் தான் முடியும். அப்படித்தான் இவர் தற்போது லியோ ட்ரெய்லர் விஷயத்தில் தன்னுடைய ஆதரவு குரலை ஒலிக்க விட்டுள்ளார். அதில் இடம்பெற்றிருந்த கெட்ட வார்த்தை குறித்து இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

Also read: லியோவால் பல லட்சம் நஷ்டம்.. வாயை திறக்காமல் கம்முனு உம்முனு இருக்கும் தளபதி

உடனே சீமான் அது கெட்ட வார்த்தை கிடையாது, மக்களின் மொழி. இயல்பாக பேசக்கூடிய வார்த்தை தான் படத்தில் வருகிறது என்று விஜய்க்கு சப்போர்ட் செய்யும் விதமாக பேசி இருந்தார். இதை தான் தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன்பு கே.டி ராகவன் விஷயத்திலும் அவர் இப்படித்தான் தேவையில்லாததை பேசியிருந்தார்.

அதாவது தன்னுடைய கட்சியை சேர்ந்த பெண்ணுக்கு அவர் அந்தரங்க தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டது. இது பெரும் கண்டனங்களுக்கு ஆளான நிலையில் ராகவன் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தது.

Also read: விஜய்க்கு பெரிய முட்டு கொடுக்கும் அண்ணன்.. நம்ம குட்டு வெளி வந்துரும்னு நியாயப்படுத்தும் நடிகர்

ஆனால் அந்த சமயத்தில் சீமான், யாரும் செய்யாததையா அவர் செஞ்சிட்டார் என பேசி பல பிரபலங்களிடம் வாங்கி கட்டி இருந்தார். அதையடுத்து இப்போது பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு எதிராகவும் தன் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். மாணவர்கள் வீட்டிலும் சாப்பிட்டு விட்டு தான் வருகிறார்கள்.

பள்ளியிலும் சாப்பிடுகிறார்கள், இதனால் டாய்லெட் நிரம்பி விடுகிறது என்று பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அதை அடுத்து இப்போது லியோ விவகாரத்திலும் கருத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வந்தால் தங்கள் பக்கம் இழுக்கவும் அவர் பிளான் போடுவதாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

Also read: தேடிவந்த ஸ்ரீதேவியை துரத்திவிட்ட உதயநிதி.. லியோவுக்கு போட்ட பெரிய கும்பிடு

Trending News