புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தம்பிக்காக இறங்கி வந்த புதிய குணசேகரன்.. நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்குமா எதிர்நீச்சல்

Ethir Neechal: பெண்களை மையப்படுத்தி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி இப்போது பின்னடைவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இத்தொடரின் டிஆர்பி கிங் ஆக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து சமீபத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.

எதிர்நீச்சல் தொடரின் அச்சாணியாக இருந்ததே குணசேகரன் தான். ஒரு வில்லனாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த குணசேகரனின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. ஆனாலும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று தான் ஆக வேண்டும்.

Also Read : டிஆர்பிக்காக சன் டிவி செய்த மட்டமான வேலை.. குணசேகரன் கதாபாத்திரத்திற்காக போட்ட ஸ்கெட்ச்

அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரில் புதிய குணசேகரனாக நடிகர் வேல ராமமூர்த்தி இடம் சன் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாரிமுத்து சாயலில் இருக்கும் இவருக்கும் குணசேகரன் கதாபாத்திரத்திற்கான மிடுக்கு மற்றும் குரல் வளம் இருப்பதால் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி விடுவார் என ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

ஆனாலும் குணசேகரன் கதாபாத்திரத்தை யாராலும் நிரப்ப முடியாமல் இருந்தாலும் தம்பிக்காக இறங்கி வர இருக்கிறார் வேல ராமமூர்த்தி என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது வேல ராமமூர்த்தி மற்றும் மாரிமுத்து இருவரும் உடன் பிறந்த சகோதரர்களாக சமீபத்தில் தான் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்களாம்.

Also Read : இந்தாம்மா ஏய், மாரிமுத்துக்கு நிகர் யாரு.? டிஆர்பி கிங்கின் மரணத்தால் சிக்கலில் சன் டிவி

மூத்த அண்ணனாக வேல ராமமூர்த்தி நடித்துள்ள நிலையில் அவரது தம்பியாக மாரிமுத்து நடித்திருக்கிறார். சொத்துப் பிரச்சினையால் இருவரும் பிரிந்து அதன் பிறகு எவ்வாறு சேர்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம். அப்போது ஒரே ஹோட்டலில் தங்கியிருந்த வேலராமமூர்த்தி மற்றும் மாரிமுத்து இருவரும் தூங்கும் நேரத்தை தவிர்த்து மற்றபடி ஒன்றாக பேசிக் கொண்டுதான் நேரத்தை செலவிடுவார்களாம்.

இப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மாரிமுத்துவின் இறப்பினால் அவர் நடித்த குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்கிறார். மேலும் சீரியலில் நடித்த அனுபவம் இல்லை என்றாலும் மாரிமுத்துக்காக எதிர்நீச்சல் தொடரில் கண்டிப்பாக வேல ராமமூர்த்தி நடிப்பார் என்பது கிட்டத்தட்ட 95 சதவீதம் உறுதியாகிவிட்டது. புதிய குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளதால் எதிர்நீச்சல் டிஆர்பி நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : ஆதி குணசேகரனின் கனவு இல்லம் எத்தனை கோடி தெரியுமா.? அவர் ஆசைப்படி திறந்து வைக்க உள்ள 3 பெரும் புள்ளிகள்

Trending News