திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

போர் தொழில், குட் நைட் படத்திற்கு டஃப் கொடுக்க போகும் அடுத்த படம்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான அப்டேட்

New Tamil Movie Release Date Announcement: சமீப காலமாகவே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய தரமான படங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் போர்த்தொழில், குட் நைட் படங்கள் எப்படி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனதோ, அதேபோலவே இப்போது அடுத்த படத்தை வெளியிடப் போகின்றனர்.

ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் நடிப்பில் அருவி மதன் இயக்கியிருக்கும் படம் தான் நூடுல்ஸ். இந்த படத்தை தம்பி அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். வெளியிட்டு உரிமையை  மாநாடு பட  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட முன்வந்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 8ம் தேதி  ரிலீஸ் ஆகிறது. நூடுல்ஸ் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று  சுரேஷ் காமாட்சி மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

Also Read: ஏழைகள் வயித்தெரிச்சலை கொட்டிக் கொள்ளும் அதிதி சங்கர்.. வாய்ப்பைத் தட்டிப் பறிப்பது ஒரு பொழப்பா?

சில வருடங்களுக்கு முன் ரசிகர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய அருவி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் அருவி மதன். அதன் பின் கர்ணன், பேட்ட, அயலி, துணிவு, மாமன்னன், மாவீரன் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும்  வில்லன் கேரக்டரிலும் நடித்து அசத்தார்.

இவர் இப்போது நூடுல்ஸ் படத்தில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இரண்டே நிமிடத்தில் பரிமாறக்கூடிய நூடுல்ஸ் போலவே, இரண்டே நிமிடங்களில் நமது தேவைகளை தீர்க்கக்கூடிய  நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயத்தில்  நடந்திருக்கிறது.

Also Read: 3 வருடத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் மிஷ்கின்.. நண்பனுக்காக களம் இறங்கும் ஹீரோ

அந்த இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால் கதாநாயகி செய்த செயலால் அந்த குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக சிக்கிக் கொண்ட சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அந்தப் பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் நூடுல்ஸ் படத்தின் மையக்கரு.

எனவே வரும் செப்டம்பர் 8ம் தேதி  ரிலீஸ் ஆகும் நூடுல்ஸ் திரைப்படம்  பெரிய படங்களின் மார்க்கெட்டிங் கப்பல்களுக்கு நடுவே இந்த கிழித்து செல்லும் படகையும் களம் இறக்கப் போவதாக படக்குழு நம்பிக்கையுடன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

Also Read: புதுவரவான காமெடி வில்லனாக கலக்கும் மங்களம் சீனு.. ஜெயிலர் பட ப்ளாஸ்ட் மோகனுக்கு வரிசையில் நிற்கும் 4 படங்கள்

Trending News