வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Por Thozhil Movie Review – சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்.. சரத்குமார், அசோக் செல்வனின் போர் தொழில் முழு விமர்சனம்

அசோக் செல்வன் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவர் நடித்த படங்களை எடுத்துப் பார்க்கும்போது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படங்களும் இல்லை. இப்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் போர் தொழில் படம் கண்டிப்பாக அவரை வேறு ஒரு தரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் துளியும் மாற்றுக் கருத்து இல்லை.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக்செல்வன், சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போர் தொழில். தமிழ் சினிமாவில் நிறைய சீரியல் கில்லர் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆகையால் ஒரு படத்துடன் மற்றொரு படத்தை பொதுவாக ஒப்பிடுவது வழக்கமாக தான் இருந்து வருகிறது.

Also Read : ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் 5 ஹீரோக்கள்.. அடல்ட் கண்டன்ட் நடிச்சும் வேலைக்கு ஆகாத அசோக் செல்வன்

ஆனால் எளிதில் போர் தொழில் படத்தை ஒப்பிட்டு சொல்லி விட முடியாது. ஏனென்றால் இயக்குனர் ஒவ்வொரு விஷயத்திற்கும் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார் என்பது படத்தில் தெரிகிறது. திருச்சியை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் கொலை நடந்து வருகிறது. அதை விசாரணை செய்யும் அதிகாரியாக லோகநாதன் கதாபாத்திரத்தில் சரத்குமார் வருகிறார்.

அவருக்கு உதவியாளராக புதிய போஸ்டிங் வாங்கிக் கொண்டு வருகிறார் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வன்.தொடர் கொள்ளைகளில் சிறுபிழை கூட செய்யாமல் நேர்த்தியாக முடிக்கும் சீரியல் கில்லரின் மர்ம முடிச்சுகளை இந்தக் கூட்டணி எவ்வாறு அவிழிக்கிறார்கள் என்பதுதான் போர் தொழில்.

Also Read : கொலைகாரன் எப்படிப்பட்டவன், அவன் பண்ண கொலையை படிக்கணும்.. சரத்குமார் மிரட்டும் போர் தொழில் ட்ரெய்லர்

சரத்குமார் எந்த பந்தாவும் இல்லாமல் தனக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதுவும் அசோக் செல்வன், சரத்குமார் காம்போ வேற லெவலில் அமைந்துள்ளது. மேலும் இரண்டாம் பாதியில் பெரும்பான்மையான காட்சிகள் முதல் பாதியுடன் ஒத்துப் போகிறது.

இந்த கொலைக்கான காரணத்தையும் ஏற்றுக் கொள்ளும் படியாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். மேலும் படத்தின் ஒளிப்பதிவு கூடுதல் வலு சேர்த்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் இடம்பெறும் வசனங்களும் அல்டிமேட் ஆக உள்ளது. மொத்தத்தில் போர் தொழில் திக் திக் காட்சிகள் மூலம் சீட்டின் நுனிக்கு வரச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சினிமாபேட்டை ரேட்டிங் : 4/5

Also Read : காசே வாங்காமல் நட்புக்காக நடித்துக் கொடுத்த 5 நடிகர்கள்.. இமேஜ் பார்க்காமல் சரத்குமார் போட்ட கெட்டப்

Trending News