ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

ஸ்ரீமதியின் மரணத்தில் கிளம்பும் சந்தேகங்கள்.. வெளிவந்த பிரேத பரிசோதனை ரிப்போர்ட்

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் மாணவியின் மரணம் தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு வந்த பிரேத பரிசோதனை அறிக்கை பல சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் படி மாணவியின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அதிக ரத்தப்போக்கின் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாணவி அணிந்திருந்த உடை முழுவதும் ஏகப்பட்ட ரத்தக்கரைகள் இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாணவியின் பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவுக்கு கீழ் உள்ள சுவற்றில் ரத்தக்கரை படிந்த கைத்தடமும், மாடிப்படி ஏறும் இடத்தில் ரத்த கரையும் இருப்பது அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொந்தளித்த பொதுமக்கள் பள்ளிக்கு எதிராக பல வன்முறை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் மீண்டும் ஒருமுறை பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. இதில் மாணவியின் தாய் தன் மகளுக்கு பாலியல் தொடர்பான தொல்லைகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறார்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மாணவியின் தந்தை நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனால் தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு களத்தில் குதித்துள்ளது.

இதன் காரணமாக இப்போது இந்த வழக்கில் தமிழக அரசு அதிக தீவிரம் காட்டி வருகிறது. கூடிய விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்று காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து வருகின்றனர். இருப்பினும் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் இது போன்ற கொடுமைகளுக்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற நோக்கில் தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News