புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அடுத்த ராயப்பனை மிஞ்சும் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி.. மிரட்டும் சைரன் பட போஸ்டர்

Siren Poster: ஜெயம் ரவிக்கு கடைசியாக ஹிட் கொடுத்த படம் என்றால் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் தான். இந்த படத்திலும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் தனியாக ஜெயம் ரவியை மட்டும் அந்த வெற்றியை சாரவில்லை. ஆகையால் அடுத்த ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஜெயம் ரவி செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் புதுமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் சைரன் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் ஹோம் மூவி மேக்கர் நிறுவனம் சைரன் படத்தை தயாரிக்கிறது. இந்த சூழலில் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Also Read : அடேங்கப்பா ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு இவ்வளவா!. தனி ஒருவனாக சாதித்து காட்டிய ஹீரோ

ஜெயம் ரவி ரத்தக்கறையுடன் ஒரு கையில் காப்பு மற்றும் மற்றொரு கையில் ரத்தம் படிந்த கத்தி என வேற லெவல் சம்பவம் செய்திருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது காவல் அதிகாரியையே ஜெயம் ரவி சம்பவம் செய்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

மேலும் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரத்தை சைரன் போஸ்டர் ஞாபகம் படுத்துகிறது. கண்டிப்பாக ஜெயம் ரவிக்கு இந்த படம் நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று தனது 43வது பிறந்தநாளை ஜெயம் ரவி கொண்டாடுவதால் இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

Also Read : லியோ காட்டிய பயத்தில் செப்டம்பரில் வெளிவரும் 30 படங்கள்.. ஒரு ஹிட்டுக்காக தவமிருக்கும் ஜெயம் ரவி முதல் சசிகுமார் வரை

மேலும் சைரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உள்ள நிலையில் சமுத்திரகனி, யோகி பாபு போன்ற பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். மேலும் இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக படம் வேற லெவலில் இருக்கும் என்ற இந்த போஸ்டரை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

மிரட்டும் சைரன் பட போஸ்டர்

siren
siren

Trending News