வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நம்ப பவர் அந்த ரகம் என கெத்து காட்டிய வாரிசு.. பல கோடிகளில் குவிந்த 10 நாள் கலெக்ஷன்

தமிழ் சினிமாவில் எட்டு வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாஸ் ஹீரோக்களின் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் ரேசில் களம் இறக்கப்பட்டது. இதில் எந்த படம் வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் படம் வெளியாவதற்கு முன்பே வாரிசை விட துணிவு தான் துணிந்து முதலிடம் பிடிக்கும். அப்படிப்பட்ட மனநிலை அனைத்து ரசிகர்கள் மத்தியில் நங்கூரம் போட்டது போல் பதிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகனாகிய தளபதி விஜய் அவர்களின் வாரிசு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.  

Also Read: வாரிசு, துணிவு எது வெற்றி வாகை சூடியது.. ரெட் ஜெயிண்ட் ரிப்போர்ட்

இதனால் படம் வெற்றி பெறாது என்ற மனநிலைக்கே சிலர் வந்து விட்டனர்.  வாரிசு படம் குடும்ப ஆடியன்ஸை மட்டும் கவரும் விதத்தில் அமைந்துள்ளதால் இளைஞர் பட்டாளத்தை தன் வசம் இழுக்காது என்ற மனநிலையை மாற்றி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.

இதுவரை ஆக்சனில் மட்டுமே கலக்கிய விஜயின் படங்கள் தற்பொழுது வாரிசு மூலமாக சென்டிமெண்டாக அனைவரையும் அட்டாக் செய்துள்ளது. அஜித்தின் துணிவு 200 கோடி வசூல் செய்துள்ள நிலையில் விஜயின் வாரிசு படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை தெரிவித்தவர்களே வாயை பிளக்கும் அளவிற்கு நம்ப பவர் அந்தரகம் என கெத்து காட்டிய வாரிசு உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி அஜித்தின் துணிவை பின்னுக்குத் தள்ளி உள்ளது.

Also Read: 2023-இல் ஒரே நாளில் போட்டி போடும் 4 டாப் ஹீரோக்கள்.. மீண்டும் மோத தயாராகும் விஜய், அஜித்

தற்பொழுது தளபதி விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் வசூலை வைத்து எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் உலக அளவில் அஜித் நடிப்பில் வெளியான துணிவை விட வாரிசு வசூல் வேட்டையில் முன்னிலை வகிக்கிறது. 

இதனைத் தொடர்ந்து படம் வெளியாகிய 10 நாட்களிலேயே பல கோடி வசூலை குவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் நாட்களில் வாரிசின் வசூல் வேட்டையை அஜித்தின் துணிவு படம் முறியடிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: தளபதி-67 ரிலீஸ் தேதியை லாக் செய்த லோகேஷ்.. விஜய்க்கு 2023 பிளாக்பஸ்டர் ஹிட் கன்ஃபார்ம்

Trending News