சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவர் ஸ்டார்.. எப்படி இருந்த மனுஷன்

பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். ஒரு காலத்தில் இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. இவரை ட்ரோல் செய்தவர்கள் இவரை ரசிக்கவும் செய்தார்கள். மருத்துவரான இவருக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. மனிதனாக பிறந்த அனைவருக்கும் வரக்கூடிய விஷயம் என்றாலும் கூட, இவர் தற்போது கிண்டி அரசு மருத்துவமனை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏன் என்றால், எவ்வளவு பெரிய நடிகர் அவர் ஏன் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவருக்கு சில நாட்களாகவே சிறு நீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. சினிமாவில் ஆரம்பத்தில் அறிமுகமான இவர், தன் பெயரை பவர் ஸ்டார் என்று மாற்றிக்கொண்டார்.

தமிழில் கண்ணால் டூ தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்து இங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகர் மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை பலர் பேட்டி கண்டு வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் தனக்கு, துரோகம் செய்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார். யாரை அவர் குறிப்பிடுகிறார் என்பது தான் குழப்பமாக உள்ளது.

மேலும் இவரை பண விஷயத்தில் நிச்சயம் யாரோ ஏமாற்றி விட்டார்கள். அதனால் தான், அவருக்கு இந்த நிலைமை என்றும் பச்சாதாப பட்டு வருகிறார்கள்.

மேலும் பலர், “எப்படி இருந்த மனுஷன்..” என்று கவலையோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.

power-star-hospital-admit
power-star-hospital-admit

Trending News