திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

150 பேருக்கு வேலை, 50 லட்சம் சம்பளம்.. தன் தலையில் தானே மண்ணை வாரி போட்ட பவர் ஸ்டார்

பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக அறிமுகமானார். அதன்பின்பு, இவர் 2013 ஆம் ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்தார். இந்தப் படத்தில் பவர் ஸ்டாரின் நகைச்சுவையால் அதிக ரசிகர்களை பெற்றார்.

அக்குபஞ்சர் மருத்துவரான பவர் ஸ்டார் பல தொழில்கள் நடத்தி வந்துள்ளார். சூப்பர் மார்க்கெட், மால்கள், பைனான்ஸ் போன்ற தொழில்கள் நடத்தியுள்ளார். பவர் ஸ்டார் இடம் 150 பேர் வேலை செய்து வந்தனராம். இவர்களுக்கு மாதம் 50 லட்சம் வரை சம்பளம் கொடுத்து வந்தார். பவர் ஸ்டார் ஒரு சிறிய வட்டத்திலே யாரும் அறியாதவாறு இருந்ததால் மிகவும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்துள்ளது. அதனால் இவர் சினிமா துறையை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதனால் பவர் ஸ்டார் சென்னை வந்து முதலில் ஒரு படத்தை தயாரித்தார். பின்பு அவரே நடிக்கலாம் என்று யோசித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

பவர் ஸ்டார் பிக்கப் டிராப் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது வனிதா விஜயகுமார் தொடங்கிய பொட்டிக் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

பவர் ஸ்டார் ஆறு மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பின்போது திடீரென மயங்கி விழுந்தார். படக்குழு அதிர்ச்சி அடைந்து உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மயங்கி விழுந்ததாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பவர் ஸ்டாருக்கு மீண்டும் திடீரென வலி எடுக்க நடக்கமுடியாமல் போய் விட்டது. இதனால் தற்போது ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மருத்துவமனையில் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. பவர் ஸ்டார் தற்போது ரொம்ப வலியுடன் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார். நல்லபடியாக குணமாகி வீடு திரும்புவேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Trending News