நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சர்ச்சைகளுக்கு பெயர் போன பவர்ஸ்டாரை சமீபத்தில் சந்திக்க்நேர்ந்தது அவருடன் நடந்த உரையாடலின் சில துணுக்குகளை செய்தியாக தருவதற்கு கடமைப்பட்டுள்ளது எமது குழு.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் நாம் பேச ஆரம்பித்ததும் கலாய்க்கப்போறீங்களா என்கிற கேள்வியுடனே துவங்கினார். என்னதான் மக்களை மணம் கோனாமல் மகிழ்விக்கும் காமெடி கேரக்டர்களை தேர்வு செய்தாலும் மனதுக்குள் அத்தனை பெரிய கஷ்டங்களையும் சுமந்து தான் இருந்திருக்கிறார் பவர் ஸ்டார்.
சினிமாவின் ஆரம்ப காலத்தில் தயாரிப்பாளராக களம் கண்ட பவர்ஸ்டார் பல்வேறு ஏமாற்றங்களை தான் பெற்றாராம். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு முன்பே அவர் தயாரித்த லத்திகா உட்பட சில படங்களால் அவருக்கு நாற்பது கோடிகள் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
மேலும் நடிகர் சந்தானமே வந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்காக பேசியதாக தெரிவித்த பவர் ஸ்டார் நானே முதலில் நம்பவில்லை. இத்தனை பெரிய ரீச் கிடைக்கும் இந்த கேரக்டருக்கு என்றும் கூறினார்.
சினிமாவில் நுழைந்த தருணத்தில் சிலரால் வழுக்கட்டாயமாக தனக்கு தெரியாமலே ஏமாற்றப்பட்டதாகவும். பிறகு உண்மை தெரிந்தும் அதனை பற்றி கண்டுகொள்ளாமல் விட்டதனையும் கூறினார்.
பழைய அனுபவங்கள் கற்றுத்தந்த ஒற்றைப்பாடம் எனக்கு போதுமான செல்வமும் உண்டு. அதற்கு தேவையான கடனும் உண்டு இனி தயாரிப்பு என்கிற பேச்சுக்கோ இடமில்லை என ஆக்கி விட்டதாம். இருபத்தைந்து படங்களை கடந்த பவர்ஸ்டாரின் பல்வேறு அனுபங்களை பகிர்ந்து கொண்டார்.
மக்களை மகிழ்விப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் எனக்கான சரியான இலக்கை தேர்ந்தெடுத்து சரியாக பயணிக்க இப்போது தான் கற்றுக்கொண்டுள்ளேன் என்றும் கூறினார்.