முன்னரெல்லாம் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர் நடிகைகள் சீரியலுக்கு வந்து சில காலம் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தற்போது காலமே மாறிவிட்டது.
சீரியலில் இருக்கும் இளம் நடிகைகள் பலரும் சினிமாவில் நடிகைகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் மார்க்கெட் இல்லாத நடிகர் நடிகைகள் தற்போது சீரியல்களிலும் களம் இறங்கி விட்டனர்.
சினிமா மீதுள்ள ஆசையால் சொந்தக் காசையெல்லாம் அடகுவைத்து லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் மேல் பல மோசடி வழக்குகள் உள்ளன.
இருந்தாலும் சினிமாவில் இவரை பார்த்து சிரிக்காதவர்களே கிடையாது. அதை அப்படியே பிடித்துக் கொண்டு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் சந்தானம் கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே சூப்பர் ஹிட்டடித்தன.
இதனால் ஒருகட்டத்தில் பரபரவென முன்னேறி வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார். இந்நிலையில்தான் சன் டிவி சீரியலில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
சன் டிவி நிறுவனம் படத்தை டப்பிங் செய்தது போய் தற்போது சீரியலையும் டப்பிங் செய்ய தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தெலுங்கு ஜெமினி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை ஜோதி என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்துள்ளனர். இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.