செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

150 நாள் காசு கொடுத்து படம் ஓட்டிய பிரபல நடிகர்.. இப்போ வனிதாவுடன் என்ன பண்ண காத்திருக்காரோ.!

லத்திகா என்ற காவிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் டாக்டர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவர் நடிக்க வந்ததற்கு டாக்டர் தொழிலிலையே ஒழுக்கமாக பார்த்திருக்கலாம் என பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிவந்தன.

லத்திகா 150 நாட்களுக்கு மேல் ஓடியதெல்லாம், அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியல லெவல் தான். ஆனால், படம் உண்மையாகவே 150 நாள் ஓடவில்லை நான் தான் ஓட்டச்சொன்னேன், அதுமட்டுமல்லாமல் கையில் காசு கொடுத்து ரசிகர்களையும் திரையரங்குக்கு அனுப்பினேன் என மறைக்காமல் அனைத்து உண்மைகளையும் கூறினார் பவர்.

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அனைவரையும் கொன்று கொண்டிருந்த பவர் ஸ்டாரை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் சந்தானம் காமெடி நடிகராக திசை திருப்பிவிட்டார். அதில் அவருக்கு செம வரவேற்பு இருந்தது.

அது மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகனாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்த நிலையில் பண மோசடி வழக்கில் சிறைக்குச் சென்றார். ஹீரோ, காமெடியன், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்ட பவர் ஸ்டார் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இது எனக்கு 50வது படமாகும். எனது சொந்த திரை அனுபவத்தை கொண்டு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் இப்படத்தின்மூலம் இசையமைப்பளராகவும் அறிமுகமாகிறேன் என்றார்.

ஹாரர் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் பவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். மேலும் அவருடன் இணைந்து சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன், செந்தில், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி என ஒரு பெரிய பட்டாளமே இதில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

vanitha-power-star-1
vanitha-power-star-1
Advertisement Amazon Prime Banner

Trending News