இயக்குனர் பிரபாகரனின் தாயார் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சசிகுமாரின் சுந்தரபாண்டியன். உதயநிதி ஸ்டாலினின் இது கதிர்வேலன் காதல். விக்ரம் பிரபுவின் சத்ரியன். இந்த மூன்று படங்களையும் இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். எளிமையான கதை, அழுத்தமான திரைக்கதை தான் இவரது ஸ்டைல்.
முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவான திரைப்படம் ‘சுந்தர பாண்டியன்’. இந்த படத்தில், சசிகுமார் மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நாயகன் – நாயகியாக நடித்திருந்தனர். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
முதல் படத்திற்கே, சிறந்த தமிழ் படத்திற்கான தமிழ்நாடு விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக அறியப்பட்டார்.
இதை தொடர்ந்து, உதயநிதி, நயன்தாரா நடித்த கதிர்வேலன் காதலன் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிக்கும்போது உதயநிதி, நயன்தாரா இருவரும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது தனிக்கதை. இப்படத்தையடுத்து விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் சச்திரியன் படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில், 66 வயதான இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரின் தாயார் ராஜலெட்சுமி, உடல்நல குறைவு காரணமாக இரண்டு நாட்களுக்கு முன், அவரது சொந்த ஊரான, மதுரையில் காலமானார்.
இவர் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் தன்னுடைய முதல் பட நாயகனான, சசிகுமாரை வைத்து, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.