செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

85% பட்ஜெட்டை முன்கூட்டியே வாரி சுருட்டிய ஆதி புருஷ்.. மிரள வைக்கும் ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட்

வரும் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸுக்காக காத்திருக்கும் பிரபாஸின் ஆதி புருஷ் திரைப்படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ளது.

டி சிரியஸ் நிறுவனம் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ பிசினஸ் ரிப்போர்ட் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வாயை பிளக்க வைத்திருக்கிறது.

Also Read: தந்திரமாக கமலை பகடைக்காயாக யூஸ் பண்ணும் பிரபாஸ்.. இது தெரியாமல் வாண்டடா மாட்டிய உலக நாயகன்

500 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படத்திற்கு சேட்டிலைட் உரிமைகள், இசை வெளியீட்டு உரிமைகள், டிஜிட்டல் உரிமைகள் மற்றும் பிற துணை உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய திரையரங்கு அல்லாத வருவாய் மட்டும் 247 கோடிக்கு ப்ரீ பிசினஸ் ஆகி இருக்கிறது.

அது மட்டுமல்ல 185 கோடி தெற்கில் அதன் திரையரங்கு வருவாயிலிருந்து குறைந்தபட்ச உத்திரவாதமும் ஆதி புருஷ்க்கு கிடைத்துள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக ரிலீசுக்கு முன்பே ஆதி புருஷ் 432 கோடியை வாரிக் குவித்திருக்கிறது. மொத்த பட்ஜெட் 500 கோடியில் 85%பணத்தை இப்பொழுதே வசூல் செய்திருக்கும் ஆதி புரூஷ் படத்திற்கு இன்னும் 15% பணம் மட்டுமே வந்தால் போதும்.

Also Read: பிரபாஸ் படத்திற்கு கிளம்பும் வதந்திகள்.. அதிரடியாக ரிலீஸ் தேதியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திய படக்குழு

மீதம் வசூல் ஆகுவதெல்லாம் அவர்களது லாபம் தான். நிச்சயம் இந்த படம் அசால்டாக 1000 கோடி வசூலை இறுதியில் வாரிக் குவித்து விடும் என்றும் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஹிந்தி பதிப்பில் மட்டும் ஆதி புருஷ் நிச்சயம் 100 கோடியை வெறும் 3 நாளில் வசூல் செய்துவிடும் என்றும் கணித்திருக்கின்றனர்.

இதனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெகு நாளாக பேசக்கூடிய அளவுக்கு, ரிலீசுக்கு பின் தன்னுடைய வசூலில் மிரட்டப் போகிறது. மேலும் இந்த படம் அதிவேக தொடக்க வசூலை காணும் என்றும் திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Also Read: ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ் ட்ரெய்லர்

Trending News