திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இதிகாச நாயகனாக முத்திரை குத்தப்பட்ட பிரபாஸ்.. தொடர்ந்து வம்பில் மாட்டும் பாகுபலி நாயகன்

Actor Prabhas: பாகுபலி படத்தின் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமான பிரபாஸ் இப்போது அடுத்தடுத்த சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். இவருடைய கடந்த சில படங்கள் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து இப்போது அவர் அடுத்த ஒரு வம்பில் சிக்கி இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் மோசமான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. அதிலும் ராமராக நடித்த பிரபாஸை கழுவி ஊற்றாத ரசிகர்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அப்படம் இவருக்கு மிகப்பெரும் தலைவலியை தேடி கொடுத்தது.

Also read: கமல் என்சைக்ளோபீடியானு சும்மா சொல்லல.. அவர் தொடாத இடமே இல்ல, ஆல்ரவுண்டராக இருக்க முக்கியமான 9 காரணங்கள்

இப்படி பிரபாஸை நோக்கி வந்த இந்த விமர்சனங்களை எல்லாம் அடித்து நொறுக்கும் வகையில் இவருடைய ப்ராஜெக்ட் கே பட அறிவிப்பு வெளியானது. அதிலும் உலகநாயகன் இந்த கூட்டணியில் இணைந்தது மிகப்பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. அதன் காரணமாகவே இப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதற்கேற்றார் போல் இப்படத்தில் பிரபாஸுக்கு 100 கோடி சம்பளம் என்ற தகவலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் உலகப் புகழ் பெற்ற காமிக் கான் நிகழ்வில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவை அனைத்தும் இப்போது சுக்கு நூறாக உடைந்து இருக்கிறது.

Also read: முரட்டு நடிகரையே பிஆர்ஓ ஆக மாற்றிய லோகேஷ்… ஓவர் துதி பாடும் கமல் நண்பர்

அதாவது அந்த வீடியோ மூலம் கல்கி என்ற பெயரை அறிவித்து இருந்த பட குழு பிரபாஸை சூப்பர் ஹீரோவாக காண்பித்திருந்தனர். ஏற்கனவே அதன் போஸ்டர் பங்கமாக கலாய்க்கப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து வெளியான வீடியோவிலும் பிரபாஸை பார்த்தவர்கள் இவர் என்ன இதிகாச நாயகனாக முத்திரை குத்தப்பட்டவரா என கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே ராமராக நடித்து அவருடைய மார்க்கெட்டை காலி செய்த நிலையில் இப்போது விஷ்ணு பக்கம் இவர் பார்வையை திருப்பி இருக்கிறார். அந்த வகையில் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கியாக நடிக்க இருக்கும் பிரபாஸை இப்போது ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து வம்பில் மாட்டும் பாகுபலி நாயகனின் நிலைதான் இப்போது பரிதாபகரமாக இருக்கிறது.

Also read: எந்த நடிகர்களிடம் பார்க்காத கமலின் 6 அதிசய குணங்கள்.. 5 வயதில் சம்பளமாக எத கேட்டார் தெரியுமா.?

Trending News