புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஆதிபுருஷ் கொடுத்த மரண அடி.. 1000 கோடி இயக்குனரால் தல தப்பிய பிரபாஸ்

Actor Prabhas: பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஆதிபுருஷ் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. படம் தொடங்கப்படும் போது மிகப்பெரும் ஆர்வத்தை தூண்டி இருந்தாலும் டீசர், ட்ரெய்லர் போன்றவை அதை குழி தோண்டி புதைத்தது. அந்த அளவுக்கு அப்படம் ட்ரோல் செய்யப்பட்டது.

பிரபாஸின் திரை வாழ்வில் இப்படி ஒரு சர்ச்சையை அவர் சந்தித்திருக்கவே மாட்டார். அந்த அளவுக்கு பலராலும் கழுவி ஊற்றப்பட்ட படம் ரிலீஸ் ஆன பிறகு இன்னும் சோதனைகளை சந்தித்தது. மேலும் படத்தைப் பார்த்த பலரும் ராமாயண காவியத்தை இதைவிட மோசமாக யாராலும் எடுக்க முடியாது என திட்டி தீர்த்தனர்.

Also read: முழு தமிழ் நடிகராக மாறிய பிரபாஸ்.. தடுத்து நிறுத்தி கல்லாவை நிரப்ப உதயநிதி போட்ட மாஸ்டர் பிளான்

இப்படி எல்லா பக்கமும் அடி வாங்கிய ஆதிபுருஷ் வசூலிலும் மரண அடி வாங்கியது. அதன்படி இப்படம் முதலில் 500 கோடி பொருட்செலவில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு சில டெக்னாலஜிகளைக் கொண்டு காட்சிகளின் தரத்தை மேம்படுத்த பட குழு மேலும் 200 கோடி வரை செலவு செய்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு செலவு செய்தும் படம் 450 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இப்படி மண்ணை கவ்விய இந்த படத்தால் பிரபாஸின் கேரியர் அவ்வளவுதான் என்ற கருத்தும் எழுந்தது. ஆனால் அதை எல்லாம் முறியடிக்கும் வகையில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சலார் படத்தின் தெலுங்கு தியேட்டர் உரிமம் மட்டும் 170 கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகியிருக்கிறது.

Also read: ராமர் சோலியை முடித்து அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் பிரபாஸ்.. ப்ராஜெக்ட் கே-ல் எடுக்க போகும் அவதாரம்

இதுதான் இப்போது மிகப்பெரும் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த தோல்வி படங்களை கொடுத்த இவருடைய படம் எப்படி இந்த அளவுக்கு வியாபாரம் ஆனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தான்.

கே ஜி எஃப் 2 படத்தின் மூலம் 1200 கோடி வரை கலெக்ஷன் பார்த்த இவரால் தான் சலார் படம் இந்த அளவுக்கு வியாபாரமாகி இருக்கிறது. இதன் மூலம் பாகுபலி நாயகனின் தலையும் தப்பியது. அந்த வகையில் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் எந்த அளவுக்கு வசூலை வாரி குவிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பிரபாஸ் உடன் 600 கோடி பட்ஜெட்டில் இணையும் கமல்.. இவ்வளவு கம்மி சம்பளமா என ஷாக் ஆன திரையுலகம்

Trending News