புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

காதலியை கைகழுவிய பிரபாஸ்.. பிரேக்கப்பிற்கு யார் காரணம் தெரியுமா?

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களால் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சேர்ந்து நடித்த பாகுபலி திரைப்படம் ஆனது சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதுமட்டுமின்றி பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் ஏற்கனவே தெலுங்கில் ஏகப்பட்ட திரைப்படங்களில் ஜோடி போட்டுள்ளனர்.

இந்த நிலையில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அனுஷ்கா பேட்டி ஒன்றில், ‘பிரபாஸ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே’ என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆனால் இவர்கள் இருவரும் பிரிவதற்கு காரணம் என்ன என்ற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்னவென்றால் பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்த போது, பிரபாஸின் வீட்டிலிருந்து சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஏனென்றால் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் வேறு வேறு பிரிவினர் என்பதால், பிரபாஸ் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகையால் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரது வீட்டின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொள்ள விரும்பாததால், ஒன்றாகக் கூடிப் பேசி பிரிந்து விட்டனர்.

இன்னிலையில் தற்போது 40 வயதாகும் அனுஷ்காவிற்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதால், அவரது வீட்டார் விரைவில் திருமணம் செய்யும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் அனுஷ்காவின் ஜாதகத்தில் தோஷம் இருக்குமோ என்பதற்காக கோயில்களில் பரிகாரம் செய்யப்பட்டது.

அத்துடன் அனுஷ்காவிற்கும் தெலுங்கு இயக்குனருக்கும் விரைவில் திருமணம் என்றும், அனுஷ்கா கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக அவ்வப்போது தொடர்ந்து கிசுகிசுக்கப்படுகிறது. எனவே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அனுஷ்காவின் திருமணம் செய்தி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News