செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

சமூகம் பெரிய இடம் போல.. வாடகை வீட்டுக்கே லட்சக்கணக்கில் வாரி இறைக்கும் பாகுபலி

Actor Prabhas: பாகுபலி என்ற ஒற்றை படம் பிரபாஸின் கேரியரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. உலக அளவில் பேமஸான இவர் பான் இந்தியா ஹீரோவாக முத்திரை குத்தப்பட்டு விட்டார். அந்த அளவுக்கு அவர் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

அதில் அடுத்தடுத்து தோல்வி கண்டாலும் சமீபத்தில் வெளியான சலார் வசூலில் பட்டையை கிளப்பியது. இதற்கு சில சில விமர்சனங்கள் இருந்தாலும் பிரபாஸுக்கு இப்படம் நல்ல ஓப்பனிங்கை கொடுத்தது என்பது தான் உண்மை. இதை அடுத்து தற்போது அவர் கல்கி படத்திலும் நடித்து முடித்து விட்டார்.

அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இப்படம் மே 9ம் தேதி வெளியாகிறது. கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Also read: அமரன் கேரக்டரையே அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்.. கொடுக்கிற காசுக்கு மேல கூவும் நம்ம வீட்டு பிள்ளை

இப்படத்திற்காக பிரபாசும் எக்கச்சக்கமாக சம்பளம் வாங்கி இருக்கிறார். அதனாலயே தற்போது அவர் வாடகை வீட்டுக்கு கூட பல லட்சங்களை வாரி இறைத்துள்ளாராம். அதாவது கல்கி பட சூட்டிங் முடித்த பிரபாஸ் ரெஸ்ட் எடுப்பதற்காக தற்போது லண்டன் சென்றுள்ளார்.

அங்கு ஹோட்டலில் தங்குவதற்கு விருப்பம் இல்லாமல் தான் அவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார். ஏனென்றால் அங்கு எதிர்பார்த்த பிரைவசி இருக்காதாம். அதன்படி தற்போது அவர் தங்கி இருக்கும் வீட்டின் ஒரு மாத வாடகை மட்டுமே 60 லட்சம் ஆகும்.

இதுதான் தற்போது பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. சமூகம் பெரிய இடம் போல, வாடகை வீட்டுக்கே இவ்வளவு லட்சங்களை வாரி கொடுக்கிறாரே என பாகுபலி நாயகனை பார்த்து திரை உலகினர் ஆச்சரியப்பட்டு தான் போகிறார்கள்.

Also read: வித்தியாசமான கதையால் தோற்று, எப்பவுமே கொண்டாடும் கமலின் 5 படங்கள்.. மறக்க முடியாத நந்தகுமார்

Trending News