ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிரபாஸின் கதாநாயகி.. 42 வயது நடிகைக்கு கமுக்கமாக நடக்க போகும் கல்யாணம்

Prabhas Heroine Marriage : என்னதான் ஹீரோயின்கள் எத்தனையோ படங்களில் முன்னணி ஹீரோகளுக்கு கதாநாயகியாக நடித்திருந்தாலும் ஒரு சிலர் நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடிக்கும் போது தான் இவர்களுடைய கெமிஸ்ட்ரி பார்க்கவே நன்றாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றும். அப்படித்தான் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்த ஒரு நடிகையின் ஜோடி பொருத்தம் ரொம்பவே நன்றாக இருக்கிறது.

இவர்கள் திருமணம் பண்ணிக் கொண்டால் அற்புதமாக இருக்கும் என்று ஏகப்பட்ட கமெண்ட்ஸ்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் பிரபாஸ் மற்றும் அந்த நடிகை எங்களுடைய பழக்கம் நட்பு ரீதியாக மட்டும் தான் இருந்து வருகிறது. எங்களுக்குள் அந்த விதமான நினைப்பு இல்லை என்று கூறி வந்தார்கள். ஆனாலும் இருவரும் தற்போது வரை கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருக்கும் பொழுது சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே வருகிறது.

42 வயது நடிகைக்கு டும் டும் டும்

ஆனால் தற்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரபாஸின் கதாநாயகி கல்யாணத்துக்கு தயாராகி விட்டார் என்று தகவல் வெளியாயிருக்கிறது. பிரபாஸின் கதாநாயகி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது ஆறடி உயரம், அழகிய கண்கள், தேவதை போல் இருக்கும் அழகு பொம்மாயியாக நடித்த நடிகை அனுஷ்கா தான். ஆமாங்க இவங்களுக்கு தான் கல்யாணம் கைகூடி இருக்கிறது.

தெலுங்கில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்த முதல் படமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதனால் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்கு ஜோடி போட்டு நடித்து மக்களிடம் நீங்காத ஒரு இடத்தை பிடித்து விட்டார். அத்துடன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக அனுஷ்கா அவருடைய கேரியரில் அருந்ததி, பஞ்சமுகி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மறுபடியும் வெற்றி படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயம் கமுக்கமாக நடைபெற்று இருக்கிறது. இவர் கல்யாணம் பண்ண போகும் அந்த நபர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் என்பது தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இவர் தற்போது துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூடிய விரைவில் அனுஷ்காவுக்கும் இவருக்கும் கல்யாணம் நடக்கப்போவதாகவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த தகவலுக்கு அனுஷ்கா தரப்பிலிருந்து எந்தவித மறுப்பும் , பதிலும் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் முக்கால்வாசி இவருடைய கல்யாண ஊர்ஜிதமாகிவிட்டது. இது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் 42 வயதாகும் அனுஷ்கா குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகுவது நினைத்து சந்தோஷம்தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள்.

இதற்கிடையில் கடைசியாக நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து காட்டி, கத்தனார் – தி வைல்ட் சோர்சரர் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News