வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பிரபாஸுடன் முதல் முறையாக ஜோடி சேரும் வாரிசு நடிகை.. பல வருஷம் காத்திருந்ததற்கு கிடைத்த பலனாம்

பிரபாஸுடன் ஒரு படம் நடித்து விட்டால் பல கோடிகளை புரட்டி விடலாம் என தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை அனைவரும் பிரபாஸ் பட வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்தில் பிரபல நடிகை ஒருவர் பிரபாஸின் அடுத்த பிரமாண்ட பட்ஜெட் திரைப்படத்தை கைப்பற்றியுள்ள செய்தி கோலிவுட் வட்டாரத்தில் உள்ள பல நடிகைகளுக்கு வயிற்று எரிச்சலை கிளப்பி உள்ளதாம்.

பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸின் வளர்ச்சியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. படத்திற்கு படம் பல நூறு கோடி செலவு செய்து பிரபாஸ் படங்களை தயாரிக்கின்றனர். பிரபாஸ் என்றாலே பிரம்மாண்டம் என்கிற ரேஞ்சுக்கு தன்னுடைய மார்க்கெட்டை விரிவு படுத்தி விட்டார்.

salaar-prabhas-cinemapettai
salaar-prabhas-cinemapettai

இந்நிலையில் கன்னட சினிமாவின் ஸ்டார் இயக்குனராக கே ஜி எஃப் படத்தின் மூலம் அறியப்படுபவர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்க உள்ளார்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக வாரிசு நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் ஸ்ருதிகாசன் ரவி தேஜா நடிப்பில் தெலுங்கில் வெளியான கிராக் படத்தின் வெற்றியால் ஸ்ருதிஹாசனுக்கு சலார் பட வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.

shruthi-hassan-cinemapettai-01
shruthi-hassan-cinemapettai-01

அந்த படத்திற்கு பிறகு மீண்டும் இந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருவாராம் ஸ்ருதிஹாசன். ஏற்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனத்தை ஈர்த்து வைத்துள்ள ஸ்ருதிகாசன் அடுத்தடுத்து ஹாலிவுட் செல்ல பிளான் போட்டு வருகிறாராம்.

Trending News