புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரிலீஸ் தேதியுடன் வெளியான கல்கி 2898 AD போஸ்டர்.. மிரட்டும் பிரபாஸ்

Prabhas : பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு வெற்றி கொடுத்த படங்கள் என்றால் எதுவும் இல்லை. அடுத்தடுத்த சருக்களை சந்தித்து வந்த பிரபாஸ் இப்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உலகநாயகன் கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், ராணா, திஷா பதானி என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த படத்தில் சங்கமித்து இருக்கின்றனர்.

ரிலீஸ் தேதியுடன் வெளியான கல்கி 2898 AD போஸ்டர்.. மிரட்டும் பிரபாஸ்

kalki-2898-ad
kalki-2898-ad

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முமரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கிறது.

அதன்படி கல்கி 2898 ஏடி படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கான போஸ்டரை தற்போது படகுழு வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அளித்துள்ளது. கண்டிப்பாக பாகுபலி தாண்டிய வெற்றியை இந்த படம் பிரபாஸுக்கு கொடுக்க இருக்கிறது.

மேலும் அந்த போஸ்டரில் பிரபாஸுடன் அமிதாபச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோரும் இடம் பெற்று இருக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்திலும் கமல் நடித்துள்ள நிலையில் இந்தியன் 2 படமும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

ஆகையால் விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் ஒரே மாதத்தில் கமலின் இரண்டு படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Trending News