வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பிரபாஸ் கமல் கூட்டணி கிளைமாக்ஸில் இப்படி ஒரு டிவிஸ்டா.? 150 கோடி கொடுக்குறதுல தப்பே இல்லை

Actor Kamal: சமீபத்தில் பல எதிர்பார்ப்புகளை முன் வைக்கும் விதமாக வெளிவந்த படம் தான் ஆதிபுருஷ். இப்பட நாயகனான பிரபாஸ் உடன் இணையும் கமலின் கதாபாத்திரம் கொண்ட ட்விஸ்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாகுபலியின் வெற்றி படத்திற்கு பிறகு, பிரபாஸின் மாறுபட்ட வேடத்தில் உருவான ஆதிபுருஷ், மக்களிடையே எதிர்மறை விமர்சனங்களை பெற்று படும் தோல்வியை சந்தித்தது. அதன் பின் அடுத்த படமான ப்ராஜெக்ட் கே இல் கமிட்டாகி உள்ளார்.

Also Read: ரஜினியை போட்டு ஆட்டும் கர்மா.. டபுள் மடங்கு சம்பளம், விட்ட இடத்தை பிடித்த உலகநாயகன்

மேலும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் ஆக்சன் படமான இப்படத்தில் பிரபலங்களான அமிதாப் பச்சன், உலக நாயகன், திபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் உலகநாயகன் கமலஹாசன் இப்படத்தில் பிரபாஸிற்கு வில்லனாக இடம்பெறுகிறார். இது அவரின் ரசிகர்களிடையே பல எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. இருப்பினும் இக்கதாபாத்திரம் ஏற்க கமல் சுமார் 150 கோடி சம்பளம் கேட்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

Also Read: ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படம் வெளியிட்ட மாளவிகா.. போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு

சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் 150 கோடி சம்பளமும், அவருக்கு இணையாக கமலுக்கும் 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாய் உருவாகும் இப்படத்தில் கமல் பார்ட் 1 கிளைமாக்ஸ் இறுதியில் மாஸ் என்ட்ரி கொடுக்கிறாராம்.

அதிலும் குறிப்பாக பாகம் இரண்டில் கமலின் கதாபாத்திரம் முக்கியத்துவமானதால் அதில் கமல் நடிப்பதற்கு 150 கோடி கொடுப்பதில் தப்பில்லை என்பது போல சினிமா வட்டாரங்கள் இடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அதை மேற்கொண்டு பிரபாஸிற்கு டஃப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார் உலக நாயகன்.

Also Read: பல கோடிக்கு அகலக்கால் எடுத்து வைத்த நயன்தாரா.. சிவனை நம்பி பிரயோஜனம் இல்லை என எடுத்த முடிவு

Trending News