புதன்கிழமை, நவம்பர் 20, 2024

ராஜமவுலியை அடுத்து பிரபாஸை சுற்றிவளைக்கும் ஓடிடி நிறுவனம்.. லாபத்தை கேட்டு ஆடிப்போன படக்குழு

பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இப்படம் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக படக்குழுவினர் படப்பிடிப்பு தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

பிரபாஸின் திரைவாழ்க்கையில் இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் பாகுபலி படத்திற்கு பிறகு மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட் 350 கோடி இதில் பிரபாஸின் சம்பளம் மட்டும் 150 கோடி வாங்கியுள்ளார்.

இப்படத்தில் பல மொழி நடிகர்களும் நடித்துள்ளனர். அதற்கு காரணம் அனைத்து மொழி நடிகர்களும் இப்படத்தில் நடித்தால் படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருக்கும். மேலும் அதன் மூலம் பெரிய அளவில் வசூல் பெறலாம் என்பதற்காகவே இப்படத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தினை பிரபல ஓடிடி நிறுவனம் 500 கோடிக்கு வாங்க திட்டமிட்டு உள்ளது. மேலும் படக்குழுவினரிடம் இதனைப் பற்றிக் கூறியுள்ளனர். ஆனால் படக்குழுவினர் 200 கோடி லாபத்திற்கு படத்தை கொடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

பிரபாஸிற்கு தற்போது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை சமீபத்தில் இவர் நடித்த படங்களும் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கவில்லை படத்தின் பட்ஜெட் மட்டும்தான் சாதனை படைத்தது. இதனால் படக்குழுவினர் தியேட்டரில் வெளியிட்டால் பல கோடி லாபம் பெறலாம். ஆனால் வசூல் பெறாவிட்டால் கிடைக்கக் கூடிய லாபம் கிடைக்காமல் போய்விடுமே என கூறியுள்ளனர்.

மேலும் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தியேட்டரை ஒழித்துக் கட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதேபோல ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தையும் கிட்டத்தட்ட 500 கோடிக்கு பேரம் பேசியது குறிப்பிடத்தக்கது. அதாவது முன்னணி நடிகர்கள் நடிக்கும் அனைத்து படங்களையும் ஒரு குறிப்பிட்ட லாபத்திற்கு படத்தை வாங்கி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் ஓடிடி மாறி வருகின்றனர்.

இப்படியே போனால் தியேட்டருக்கு ஒரு சில ரசிகர்கள் மட்டுமே வருவார்கள். இதனால் பல தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு சில நடிகர்களும் தியேட்டரை விட ஓடிடி தளத்தை அதிகம் நம்பி வருகின்றனர். காரணம் இவர்கள் சம்பளம் மட்டுமே எதிர்பார்க்கின்றனர். படத்தின் வசூலை பற்றி கவலைப்படுவதில்லை என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர்

- Advertisement -spot_img

Trending News