செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கேஜிஎப் இயக்குனருடன் இணையும் பிரபாஸின் சலார் படத்தில் யாஷ் நடிக்கிறாரா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ

இந்திய சினிமாவின் பிரமாண்ட நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். தற்போது இந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் பெரும்பாலும் பிரபாஸ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த அளவுக்கு பாகுபலி படங்களின் மூலம் உலகப் புகழ் பெற்றுள்ளார்.

அதேபோல் கன்னட சினிமாவை இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் பிரசாந்த் நீல் என்ற இயக்குனர். கேஜிஎப் என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவை இந்திய சினிமாவே மிரளும் அளவுக்கு சூப்பர் ஹிட்டாக மாற்றினார்.

இந்நிலையில் பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் இணையும் சலார் என்ற படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க பிரமாண்ட ஆக்ஷன் படமாக வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில்  சலார் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுக்க இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டம் போட்டுள்ளனர். ஹோம்பலே பிலிம்ஸ் தான் இப்படத்தை தயாரிக்கின்றனர். நட்பின் அடிப்படையில் யாஷ் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

prabhas-salaar-first-look
prabhas-salaar-cinemapettai

ஆகையால் பிரபாஸிற்கு சலார் படம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . ஏனென்றால் பாகுபலி 2ம் பாகத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

எனவே பிரபாஸ் இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான ஆக்ஷன் படத்தை கொடுக்க முடிவெடுத்து உள்ளதால், ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Trending News