திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பட்ஜெட்டை தாண்டி 100 கோடி செலவான புதிய படம்.. ஆனாலும் மொக்கையா இருக்கு என கவலையில் பிரபாஸ்

இந்திய சினிமாவின் பட்ஜெட் நாயகனாக வலம் வருகிறார் பிரபாஸ். பாகுபலி படங்களுக்குப் பிறகு பிரபாஸ் வளர்ச்சியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. சம்பளமே 100 கோடிக்கு மேல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சமீபகாலமாக பிரபாஸின் படங்கள் அனைத்துமே பட்ஜெட் ரீதியாக 200 முதல் 300 கோடி அசால்டாக செலவாகி வருகிறது.

அந்த வகையில் அடுத்ததாக பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் ராதேஷ்யாம் என்ற படம் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க காதல் கதையை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்திற்கு முன்னதாக 100 முதல் 150 கோடி தான் பட்ஜெட் வைத்தார்களாம். ஆனால் எதிர்பாராத விதமாக 250 கோடி பட்ஜெட் ஆகிவிட்டதாம்.

இருந்தும் படம் பாதியை கூட தாண்டவில்லை. இதனால் தயாரிப்பு தரப்பு மிகவும் அப்செட் என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ராதேஷ்யாம் படத்தின் மீது நாளுக்கு நாள் பிரபாஸுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாம்.

radhe-shyam-prabas20
radhe-shyam-prabas20

தேவையில்லாமல் ஒரு காதல் படத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்து பெரிய வசூல் பெறவில்லை என்றால் மொத்த பிரச்சனையும் நம்மீது வந்து விடுமே என அச்சத்தில் இருக்கிறாராம். ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்ற திரைப்படம் சாஹோ.

போட்டதில் பாதிக்கு பாதி கிடைத்ததால் அமைதியாக இருந்தது தயாரிப்பு தரப்பு. இதனால் இந்த காதல் படத்தில் மேற்கொண்டு சில ஆக்ஷன் காட்சிகளை சேர்த்தால் நன்றாக இருக்குமா? என இயக்குனரிடம் கோரிக்கை வைத்து கொண்டிருக்கிறாராம்.

காதல் படமாக ஆரம்பமானது பின்னர் கமர்சியல் படமாக தான் வெளிவரும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பதைப்போல இயக்குனர் கதையில் தலையிட்ட ஹீரோவின் படம் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. அதை பிரபாஸ் மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News