வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புராண நாயகனாக மாறிய பிரபாஸ்.. ராமருக்கு அடுத்து சிவனையும் விட்டு வைக்காத பாகுபலி

Actor Prabhas: பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறி இருக்கும் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் ஆதிபுருஷ் படம் வெளிவந்தது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் பயங்கர பிரமோஷன் செய்யப்பட்ட அந்த படம் ட்ரெய்லரிலேயே கடும் விமர்சனங்களை சந்தித்தது.

அதைத்தொடர்ந்து வெளியான படத்தையும் ரசிகர்கள் கண்டபடி கழுவி ஊற்றினார்கள். இதற்கு முக்கிய காரணம் பிரபாஸ் ஏற்று நடித்திருந்த ராமர் அவதாரம் மொத்தமாக சொதப்பியது தான். இதுக்கு டிவியில் ஒளிபரப்பான ராமாயணம் சீரியலே பரவாயில்லை என்ற ரேஞ்சுக்கு விமர்சனங்கள் வந்தது.

Also read: இதிகாச நாயகனாக முத்திரை குத்தப்பட்ட பிரபாஸ்.. தொடர்ந்து வம்பில் மாட்டும் பாகுபலி நாயகன்

அதனால் பிரபாஸ் இனி இது போன்ற ரிஸ்க் எடுக்க மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருடைய ப்ராஜெக்ட் கே பட அறிவிப்பு வெளிவந்தது. கமல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் நடிக்கும் அப்படத்திற்கு கல்கி 2898 AD என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் பிரபாஸ் நவீன கல்கியாக நடிக்க இருக்கிறாராம். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான இதில் பிரபாஸ் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மீண்டும் புராண சம்பந்தப்பட்ட கதையா என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

Also read: என்னது ஆதிபுருஷ் பட்ஜெட்டை வச்சு இன்னொரு ராக்கெட்டை விடலாமா? வைரல் மீம்ஸ் ஆல் உடையும் பிரபாஸ் மார்க்கெட்

இந்த நிலையில் அடுத்ததாக அவர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பான கண்ணப்பாவில் சிவனாக நடிக்க இருக்கிறாராம். அவருடன் இணைந்து நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சுவும் இதில் நடிக்க இருக்கிறார்.

இந்த தகவல் தான் இப்போது பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. ஏற்கனவே ராமராக நடித்து பட்ட வேதனை போதாதா, இதில் சிவனாக வேறு நடிக்க வேண்டுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பிரபாஸ் இனிமேல் பான் இந்தியா நடிகர் கிடையாது புராண நாயகன் என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also read: இந்த வாரம் வெளிவர உள்ள 9 படங்களின் அப்டேட்.. கேஜிஎஃப் இயக்குனர், பிரபாஸ் காம்போ ஜெயிக்க வாய்ப்பிருக்கா?

Trending News